28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர் 168’ படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகை குஷ்பூ !

 

28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர் 168’ படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகை குஷ்பூ !

நடிகை குஷ்பூ தலைவர் 168 படத்தில் இணைகிறார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முதல் முறையாகச் சிவா- ரஜினிகாந்த் கூட்டணி இணைகிறது.

tn

சூப்பர் ஸ்டாரின் 168 திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்,  டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளான வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. 

ttn

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை மீனா இணைந்துள்ளதாக இன்று காலை படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, நடிகை குஷ்பூ தலைவர் 168 படத்தில் இணைகிறார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

நடிகை குஷ்பூ கடைசியாக “பாண்டியன்” படத்தில் ரஜினி காந்துடன் நடித்தார். அந்த படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின், சுமார் 28 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்பூ சூப்பர் ஸ்டாருடன் தலைவர் 168ல் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.