’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

 

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

சனிக்கிழமை எப்பிசோட். பஞ்சாயத்து பேசித் தீர்க்கப்படும் நாள். சில பஞ்சாயத்துகள் இன்னும் கூர் தீட்டிவிடப்பட்டு மோதிக்க வைக்கவும் செய்யடும் நாள். பிக்பாஸ் வீட்டிக்குள் இருக்கும் நபர்களுக்கு ஆழ்வார்ப் பேட்டை ஆண்டவரைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் நாள். எல்லாவாற்றையும் விட, இந்த வாரத்தின் எவிக்‌ஷன் யார் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிற நாள். நேற்றும் அப்படி யூகிக்க முடிந்தது. அது யார் என்பது இறுதியில்.

#

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

பிக்பாஸ் வீட்டில் நடப்பது ஏழெட்டு டிவிகளில் ஓடிக்கொண்டிருக்க, கமல் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே, “சினிமாவுக்கு கொஞ்சம் குறைச்சல் இல்ல இது. மெல்ல மலரும் காதல், கண்ணீர், அன்பு, நிறைய தாய்மை… அரசியலும்’ என மெல்ல இடித்துக்கொண்டே மேடைக்கு வந்து வெள்ளிகிழமை  காட்சிகளைத் திறந்துவிட்டார் கமல்.

#

வியாழக்கிழமை இரவிலிருந்து படம் ஓட்டத் தொடங்கினார் பிக்பாஸ். அர்ச்சனா அண்ட் குரூப் லைட்ஸ் ஆஃப் பண்ணியும் பேசிக்கொண்டிருந்தனர். ’பேச்சுவாக்கில் சாரை வாடா போடான்னு சொன்னியா’ என்பதுபோல நிஷாவிடம் ஜித்தன் ரமேஷ் கோவிச்சிகிட்டு போனார்.

27- ம் நாள்

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

’தாரை தப்பட்டரை’யிலிருந்து செம ஆட்டத்திற்கான பாட்டை ஒலிக்க விட்டார் பிக்கி. ஆனா, இன்னிக்கு நிகழ்ச்சியெல்லாம் ஹரி படம் போல ஃபாஸ்ட் ஃபார்வேர்டாகத்தான் காட்டப்படும் என்பதால், 5 நொடிகளில் டான்ஸை நிறுத்தினார்.

முதன்நாள் சண்டைக்கு நிஷாவிடம் பேசிப் புரியவைத்த ரியோ, ஜித்தன் ரமேஷிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். ‘அப்பவே அடிக்க வேண்டியதாண்ணே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இருவரும் பழம் விட்டுக்கொண்டார்கள்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

இன்னொரு பக்கம், சோம்ஸ் யாரோ கொடுத்த சாக்லெட்டைச் சாப்பிட்டாமல் வைத்திருந்தது தெரிய வந்தது.  அர்ச்சனா டீம் இன்னும் புலனாய்வை நடத்தியதில் அந்த யாரோ சாப்பிட்டு போட்ட சாக்லெட் கவர்களை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த சோம்ஸின் ‘80ஸ் கிட்ஸ் காதல் பழக்கம் தெரிய வந்தது. டை அடிச்சிருக்கியா மேன்!

சரி.. யார் அந்த யாரோ… என்ற கேள்வியைத் திருவி திருவிக் கேட்க… அது ரம்யாவாம்! அடப்பாவி…. சோம்சு, ஏற்கெனவே உனக்கு கட்டம் சரியில்ல. இதுல ரம்யா ஆர்மியின் சாபம் வேறயா?

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

அர்ச்சனா டீம் ரிலாக்ஸாக அந்த சாக்லெட்டைத் தூக்கிப் போட்டு விளையாடிக்கொண்டே மிஸ்டர் சோமசுந்தரத்தைக் கிண்டல் செய்தது. ‘ஒரு ஃபீலிங்கும் இல்ல… ஞாபகத்துக்காக வெச்சிருக்கேன்’ என 80’ஸ் கிட்ஸாகவே மாறிபோனார் சோம்ஸு. ‘அவ உன்னைத்தான் பார்க்கிறா மச்சான்’ என ஏற்றிவிடும் 80’ஸ் கிட்ஸ் நண்பர்கள் போலவே ‘முகமெல்லாம் காதலா இருக்கே’ என தீயை மூட்டினார்கள் அர்ச்சனா அண்ட் கோ.

இதில் ரம்யாவின் பங்கு என்று என்னவென்று தெரியவில்லை. அவருக்கு சோம்ஸீன் டி.ராஜேந்தர் காலத்து காதல் தெரியுமா… இல்லை அவருக்குத் தெரியாமலேயே ‘ஒரு தலையாய்’ ஓடிக்கொண்டிருக்கிறதா இந்த மேட்டர் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

புகார் பெட்டியில் தலைவருக்கு குறைகளை எழுதிப் போடும் பணியும் ஓர் ஓரத்தில் நடந்துகொண்டிருந்தது.

கமல் வருகை

எப்போதும் போலவே உற்சாகமாக எண்ட்ரி கொடுத்தார் கமல். நிறைய பஞ்சாயத்துகள் இருப்பது கூடுதல் உற்சாகத்தைத் தந்திருக்கும். ‘விமர்சனங்களில் மூன்று வகை இருக்கின்றன’ என டென்த் சயின்ஸ் வாத்தியாராட்டம் ஆரம்பித்ததும், ஏன் திடீர்ன்னு இதை சொல்ல ஆரம்பிக்கிறார் எனத் தோன்றியது.

‘கூலிக்கு மாரடிக்கிறது’ விஷயம் புரியாமல் விமர்சனம் செய்யது’, ‘நம்மை மோம்படுத்த சொல்வது’ இப்படி 1,2,3 மூன்று முருகப்பெருமான் போல வரிசைப்படுத்தி விளக்கி 3-வதை மட்டும் பொருட்படுத்துக.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

அகம் வழியே வீட்டுக்குள் நுழைந்த கமல், ‘இந்த வார டாஸ்க்கை எல்லோரும் நல்லா செய்தீர்கள்’ எனப் பாராட்டி விட்டு ‘மங்கலகரமாக ஆரம்பிப்போம்’ என சுமங்கலி விஷயத்துக்கு வந்தார். வீட்டில் உள்ள பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்க, ‘விஷயம் சரிதான். தன்னை உதாரணமாகக் காட்டியிருக்க வேண்டாம். மேலும் அந்த இடத்தில் சொல்லியிருக்க வேண்டாம்’ என்பதாக அர்ச்சனா, நிஷா, லேசாக மாற்றி ரம்யாவும் சொன்னார்கள். ஷனம், சம்யுக்தா நேரடியாக ஆதரவை அனிதாவுக்கு வழங்கினர்.

‘நான் பேசியதில் இப்பவும் உறுதியாக இருக்கிறேன்’ என்ற அனிதாவுக்கு ‘இரு கைத் தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தார் கமல். அப்பதான் அனிதாவின் முகத்தில் அப்பாடி என்று நிம்மதி வந்தது. ஏனெனில், இந்தப் பஞ்சாயத்து செல்லும் திசையை அவரால் யூகிக்க முடியவில்லை.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

’நீங்க சொன்னது சரி.. இந்த இடத்தில் சொல்லாமல் வேறு எங்கு சொல்வது? இன்று பெரியார் இருந்திருந்தால் கைத்தட்டி வரவேற்றிருப்பார்’ என்று சரியான இடத்தை நோக்கி நகர்த்தினார் கமல். பெரியாரின் கருத்துகளில் அனிதாவுக்கு உடன்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். நேரடியாக படிக்க வாய்ப்பு கிடைக்காதிருக்கலாம். ஆனால், பெரியார் சொன்னதன் சாரம் சமூகத்தில் பரவ, அதன் தாக்கம் அனிதாவுக்குள்ளும் வந்திருக்கிறது. இதுதான் தமிழ்நாடு முழுக்க நிலை. அதனால்தான் பக்தி மனநிலை இருந்தாலும் பெரியளவில் மதக் கலவரங்கள் தமிழகத்தில் நடப்பதில்லை.

‘பெரியாரை இருக்கு… இல்லை என்ற விஷயத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது தேவையா… இல்லையா என்பதில்தால் இருக்கிறது. பெரியார் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. சமூகத்திற்கு இது தேவையா… தேவையில்லையா… என்றுதான் அவர் பார்த்தார். அதை நான் எடுத்துக்கொண்டேன். நான் நாத்திக வாதி அல்ல… ஏனெனில், அது ஆத்திகர் கொடுத்த பெயர். அது வேண்டாம் எனக்கு. நான் பகுத்தறிவுவாதி’ என அனிதாவை மய்யமாகக் கொண்டு சாமி ஆடிவிட்டார் கமல்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

‘நானும் உங்க ஃபாலோவர்தான் சார். என் அம்மாவும் கைம்பெண்தான். அவர் பட்ட அவமானத்தை அருகில் இருந்த பார்த்தவன் நான். பெரியாரின் கருத்துகளைப் படித்தவன்’ என சுரேஷ் தம் பக்கத்து பந்துகளை அடித்துக்கொண்டிருக்க, பெரியார் பற்றிய பேச்சு வளர்ந்தது.

கடவுளிடம் கோபித்துக்கொண்டு வந்தவன் அல்ல, கருத்தியலாக வந்தவன் என்பதை ’விரிவாக’ பேசி, ‘உங்கள் கருத்தில் ஸ்ட்ராங்கா இல்லையெனில் சொல்லாதீர்கள்’ என்று அனிதாவிடம் இடித்துரைத்தார். ஏனெனில், அனிதா தன் வாழ்வில் சந்தித்த சம்பவங்கள் மூலம் மூடநம்பிக்கையை எதிர்க்க துணிந்திருக்கிறார். அது கருத்தியலாக மாற வில்லை என்பதே உண்மை. கமல் சிறிதுநேர இடைவேளை விட, பிக்பாஸ் வீட்டில், கிடைத்த மகிழ்ச்சியான தருணத்தை நினைத்தோ, பஞ்சாயத்தில் தப்பித்ததை நினைத்தோ பாலாவின் தோள்சாய்ந்து அழுதுகொண்டிருந்தார்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

உண்மையில் கமல் அல்லாது வேறொருவர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால், இந்தப் பஞ்சாயத்து இப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அனிதாவை குற்றவாளியாக்கும் விதமாக மாறியிருக்கலாம். அதுவும் விலகிய உறவுகளை இணைக்கும் நிகழ்ச்சிகள் நடத்துபவர்களில் ஒருவர் எனில், நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. சபாஷ் கமல்… சென்னை vs கொல்கத்தா போட்டியில் இறுதி ஓவர் ஜடேஜா பேட்டிங் போல இருந்தது உங்கள் பகுதி.

இடைவெளிக்குப் பிறகு வந்தவர், பள்ளிகளில் ரேங்க் கார்டு வாங்கும்போது ‘யாரோ ஒருத்தன் அப்பா கையெழுத்த போட்டிருக்கான். நீயா வந்துட்டா ஒரு அடியோடு விட்டுடுவேன்’ என வாத்தியார் சொல்வதுபோல கமல், அடுத்த பஞ்சாயத்து என்றதும் கையைத் தூக்கினார் பாலா.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

‘தங்கம் தேடி எடுக்கும் டாஸ்க்கில் யாராவது என் தங்கத்தைத் திருடட்டும் என ஆரி தூக்கியதுபோல நானும் தூங்கினேன். அது குற்றமாகி விட்டது. கேப்டனாகி அம்மி அரைக்க வைப்பேனு சொன்னது தப்பா அர்த்தமாயிடுச்சு’ என்று எஸ்கேப்பாகும் விதமாக நடந்த விஷயங்களைச் சொல்லிட்டு இருந்தார் பாலா. ‘அம்மி அரைக்க வெச்சீங்களே’ என்று கேட்டதும் ‘நானும் அரைச்சேன் சார். எல்லாத்துக்கும் முன் உதாரணமாக இருக்க நினைச்சேன்’ என பாலா சொன்னதும் ரியோ ரியாக்‌ஷன் செம.

அர்ச்சனாவிடம் வந்தபோது ‘அன்புக்கு பழக்கமில்லை’ என்று பாலா சொன்னது உடைந்து, அணைத்துக்கொண்டேன் என்பதாகச் சொன்னார் அர்ச்சனா. அன்பு எப்படி வந்தாலும் ஏத்துக்கோங்க.. அது ஸ்டேட்டர்ஜியாக இருந்தாலும் சரி. அன்பே ஸ்டேட்டர்ஜியாக இருந்தாலும் சரி என்றார். கமலுக்கே மய்யமாய் தலையாட்டினார் பாலா.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

‘ஹார்ஷா பேசிட்டு இருந்தவங்க… சட்டுன்னு ராசியாயி கட்டிப்பிடிச்சிட்டு இருந்தது அதிர்ச்சியா இருந்துச்சு’ என ஆடியன்ஸாக ரியோ சொல்லிக்கொண்டிருந்தார். சீரியஸாகப் போய்க்கொண்டிருந்ததை வேல்முருகன் பக்கம் திருப்பி ‘இருதலை கொள்ளி எறும்புக்கு சரியான உதாரணம் வேல்முருகன்’ எனக் கிச்சுகிச்சு மூட்டினார் கமல். பிரேக் விட்டதும், அன்பே ஸ்டேட்டர்ஜிக்கு ‘பாலா மாட்டிகிட்டான்’என்பதாக புது விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தனர் அர்ச்சனா அண்ட் கோ.

#

’கண்ணாடி அறை வாய்க்கவில்லை. வாய்க்கப்பட்டது (!)’ என்று பன்ச்சொடு தொடங்கியது ஆரியின் பஞ்சாயத்து. ‘போரிங் பர்ஃபார்மர் என ஆரிக்கு யார் யார் ஓட்டுப்போட்டீங்க. கை தூக்குங்க’ என்றதும் பிக்பாஸ் வீட்டில் செம குழப்பம். பெஸ்ட் பர்மார்மர்ஸ் இருவர், வாரத்தில் சிறந்தவர் ஒருவர். போரிங் பர்ஃபார்மர் இருவர் அவ்வளவுதான். இதைக்கூட நினைவில் வைத்திருக்க கஷ்டப்பட்டார்கள். இதுக்கு அவர்; அதுக்கு அவர் எனக் குழப்பி அடித்தார்கள். ஆரி தெளிவாக விளக்கினார். (ஆரி பிரச்னையே தெளிவாக இருப்பதுதான்… எல்லோரும் குழம்பி கிடக்கையில் ஒருத்தன் மட்டும் தெளிவாக இருப்பானாம்.. விட மாட்டோம் என ஹவுஸ்மேட்ஸ் நினைப்பதுதான்) இவ்வளவு குழப்பத்துலதான் செலக்‌ஷனே நடக்குதா என உள்குத்தலோடு கமெண்டினார் கமல்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

’இந்த செலக்‌ஷன்க்குப் பின்னால் நம்பர் கேம் இருக்கிறதுபோல இருக்கே’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் கமல்.  அதை அரசியல் என்றும் முடிச்சிப்போட்டார். அதாவது நிஷா, பாலா, சோம்ஸ் மூவரையும் கேப்டனுக்கு மோத விடுவது, இதில் தனக்கான ஆளைத் தேர்வு செய்வது என அர்ச்சனா அண்ட் கோ வின் அரசியலை கோடிட்டு காட்டினார் கமல். ‘மைண்ட் வாய்ஸ் இவ்வளவு சத்தமாகவா கேட்குது என்பதுபோல அர்ச்சண்ட் அன் கோ திகைத்தனர்.

‘ஃபேவரிட்டிஸைம் இருக்கு சார்’ என்று தானாக ஆஜரானார் ஷனம். முந்திரிக்கொட்டை பற்றிய பேச்சு வந்தது. அழகாக பாலாவை வெளிச்சமிட்டு காட்டினார் ஷனம். அதற்கான பரிசாக, ’ஷனம் எவிக்‌ஷனிலிருந்து சேஃப்’ என்று அறிவித்தார்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

’நம்பர் கேம்’ ஆடாமல் பொறுமையாக இருங்கோ’ என்று சுற்றிவளைத்து மூக்கைத் தொட்டு அர்ச்சனாவுக்கு டிப்ஸ் தந்தார் கமல். மீதமிருக்கும் 10 பேரில் யாரையெல்லாம் எவிக்‌ஷனிலிருந்து விடுவிக்கலாம் என்பதற்காக ஜோடி ஜோடியாக நிற்கச் சொன்னார்.

ரியோ – நிஷா, ரம்யா – ஆஜித், அனிதா – சுரேஷ், ரமேஷ் – சோம்ஸ், பாலா – வேல்முருகன் என்று பிரித்து நிற்கச் சொன்னார். பாலா – வேல்முருகன் என்றதும் எப்போதும் ஜோடியாகவே இருக்கும் பாலா – ஷிவானி பிரிந்துசெல்ல வேல்ஸ் ஒட்டிக்கொண்டார்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

’ஆஜித்’ என்று அழுத்தமாக கமல் பேச ஆரம்பித்ததும் அவர் விடுவிக்கப்படுகிறார் என்று நினைத்தால் ‘என்ன ஆஜித் முகத்தில் மலர்ச்சியே இல்லை’ என்று குசலம் விசாரித்தார். உண்மையில் எவிக்‌ஷன் பற்றி அதிக கவலையில் இருப்பவர் அவர்தான். அனிதாவுக்குக்கூட நாம் இருப்போம் என்ற முரட்டுத் துணிச்சல் வந்துவிட்டது.

ஜோடி பட்டியலில் முதலில் பெயர் உள்ள ரியோ, ரம்யா, அனிதா, ரமேஷ், பாலா ஆகியோர் எவிக்‌ஷனிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அத்தோடு நன்றி வணக்கம் என விடைபெற்றார் கமல்.

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

பிக்பாஸ் வீட்டுக்குள் ஆரி – அனிதா இருவரும் சம்பாஷனையில், ‘சோம்ஸ் நல்ல பையன். அவனை பலி கொடுக்க அர்ச்சனா டீம் நினைக்குது’என உலர்த்திக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், பாலாவும் சம்யுக்தாவும் பேசுகையில், ‘’வேலை செய்யாம தூங்கின என்னை எழுப்பினது அவங்களுக்கு எதிரா வந்துடுச்சு’ என திருவாய் மலர்ந்துகொண்டிருந்தார் பாலா. அதெப்படி பாஸ்… லாஜிக்கே இல்லாம நீங்க பேசுவீங்கன்னு தெரியும்.. யோசிப்பதில்கூடவா?

’அனிதாவுக்குப் பாராட்டு… சுரேஷ் பெரியாரிஸ்ட்’ ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளோடு பிக்பாஸ் 27-ம் நாள்

இன்று ஞாயிற்றுக்கிழமை எவிக்‌ஷனில் இரண்டு பெயர்களை பட்சி சொல்கிறது. ஒன்று, ஆஜித், இரண்டு வேல்முருகன். இரண்டு பாடகர்களில் நாட்டுப்புற நாயகன் வெளியேறவே அதிக வாய்ப்பிருக்கிறதாம்.