மனைவியை தாயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது

 

மனைவியை தாயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது

திருப்பத்தூரை சேர்ந்த ஹனீப் இப்ராஹீம், காரைக்குடியை சேர்ந்த பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இஸ்லாம் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் 101 பவுன் வரதட்சணையாக வாங்கியுள்ளனர் ஹனீப் குடும்பத்தினர். திருமணத்திற்கு பிறகும் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

மனைவியை தாயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது

இந்த நிலையில் ஒரு பெண் குழந்தை 4 வயதாகிவிட்டது. மனைவி, குழந்தையுடன் மதுரையில் தனிக்குடித்தனம் சென்றார் ஹனீப். அங்கே வரதட்சணை மேலும் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார் ஹனீப்.

இதை எதிர்த்து கேட்டதால், மனைவியை அவரது தாயார் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார் ஹனீப். இரண்டு மாதங்கள் அந்த பக்கமே வரவில்லை.

இந்த இரண்டு மாத இடைவெளியில் முதுகுளத்தூர் அடுத்த காக்கூர் கிராமத்தில் உள்ள வேறு ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் ஹனீப். இந்த தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியான மனைவி, காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டார். ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஹனீத், அவருக்கு உடந்தையாக இருந்த காக்கூர் பள்ளி ஜமாத் தலைவர் அஸ்ரப் அலி உள்ளிட்ட 8 பேர் கைது வழக்கு பதிவு செய்யப்பட்டத். இன்று காலை ஹனீப் கைது செய்யப்பட்டார். மற்ற 7 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.