பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் காலமானார்

 

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் காலமானார்

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் இன்று காலையில் காலமானார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் காலமானார்

தளபதி, ரோஜா, இருவர், உயிரே, துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ்சிவன். டெரரிஸ்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார். கேரளாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான ஒளிப்பதிவாளராக 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் சிவன் மாரடைப்பால் காலமானார்

சிறந்த ஒளிப்பதிவுக்காக இதுவரைக்கும் 12 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரின் தந்தை சிவன்(89) மலையாள திரையுலகம் கொண்டாடும் பிரபலமான ஒளிப்பதிவாளர். இவர் சிறந்த ஒளிப்பதிவாளராக இதுவரைக்கும் மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

வயது முதிர்வால் கேரளாமாநிலம் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார் சிவன். இந்நிலையில் இன்று காலையில் திடீரென அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததால் சிவனின் ரசிகர்களும் சந்தோஷ் சிவனின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய , சர்வதேச விருதுகளை வென்ற இயக்குநரும், கேரளாவின் முதல் தொழில்முறை பத்திரிகை புகைப்படக் கலைஞருமானமானவர் சிவன். கேரளாவின் வரலாற்றில் நேரில் கண்ட சாட்சியாக இருந்தவர் சிவன். முதல் கேரள அமைச்சரவையின் பதவியேற்பு விழா உட்பட பல முக்கிய கேரள தருணங்களை புகைப்படம் எடுத்தவர் சிவன். ஸ்வப்னம் மற்றும் யாகம், அபயம், கொச்சு கொச்சு மொஹங்கல், ஓரு யாத்ரா, கிலிவதில் மற்றும் கேசு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

1959 ஆம் ஆண்டில், திருவனந்தபுரம் சிலை சந்திப்பில், ‘சிவன் ஸ்டுடியோஸை’ நிறுவினார் சிவன். கேரளாவைச் சேர்ந்த முதல் பத்திரிகை புகைப்படக் கலைஞரான சிவன், 1965 ஆம் ஆண்டில் வெளியான கிளாசிக் மலையாள திரைப்படமான ‘செம்மீன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். 1991 ல் ‘அபயம்’ படத்தினை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை வென்றது.

சிவன் மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, சட்டமன்ற சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜயன் தனது இரங்கல் செய்தியில், ’’சிவன் தனது ஒளிப்பதிவு திறமை காரணமாக திரைத்துறையில் ஒரு சிறந்த இடத்தில் இருந்தார்’’என்று குறிப்பிட்டுள்ளார்.