”அனைத்து குடும்ப தலைவிக்கும் இல்லையாம்; கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும்தான் மாசம் ஆயிரம் ரூபாயாம்..”

”அனைத்து குடும்ப தலைவிக்கும் இல்லையாம்;  கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு  மட்டும்தான் மாசம் ஆயிரம் ரூபாயாம்..”

திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த வாக்குறுதியை ஏன் இன்னமும் செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

”அனைத்து குடும்ப தலைவிக்கும் இல்லையாம்;  கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு  மட்டும்தான் மாசம் ஆயிரம் ரூபாயாம்..”

இதுஒருபுறம் இருக்க, குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என்றும், அடுத்து குடும்ப தலைவி என்றும்தான் வரிசைப்படி உறவுகள் அமைந்திருக்கும். ஆனால், குடும்ப தலைவி என்று முதலில் பெயர் இடம்பெற்றிருந்தால்தான் ஆயிரம் ரூபாய் என்ற பேச்சு ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் பலரும் குடும்ப அட்டையில் குடும்ப தலைவி என்ற பெயரை முதல்வரிசையில் மாற்றி வருகிறார்கள்.

”அனைத்து குடும்ப தலைவிக்கும் இல்லையாம்;  கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு  மட்டும்தான் மாசம் ஆயிரம் ரூபாயாம்..”

இந்நிலையில், “ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறியிருந்தார்கள். அது பற்றி விசாரிக்கச் சென்றால் கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போடாத கார்டுக்கு இல்லை என்று கூறுகிறார்கள் . அதுமட்டுமில்லாமல் நான்கு எழுத்துக்கள்(NPHH) கொண்ட நபர்களுக்கு இல்லை என்றும் மூன்று எழுத்துக்கள் (HHH) கொண்ட நபர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறுகிறார்கள் . கொடுத்தால் அனைத்து பெண்களுக்கும் சமமாக கொடுங்கள் இல்லையென்றால் கொடுக்காதீர்கள்” என்று தமிழக பாஜக பிரமுகர் வலியுறுத்தி இருக்கிறார்.

தன்னிடம் ஒரு பெண் குறைப்பட்டுக்கொண்டதை சொல்லி, முதல்வர், இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்கிறார் காயத்ரி ரகுராம்.