பிரபல திரைப்பட பாடகி கொரோனாவால் மரணம்;தந்தையும் கொரோனாவுக்கு பலி

 

பிரபல திரைப்பட பாடகி கொரோனாவால் மரணம்;தந்தையும் கொரோனாவுக்கு பலி

கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் சிகிச்சை பலனின்றி பிரபல பாடகி தபு மிஷ்ரா(36) உயிரிழந்தார்.
தபு மிஷ்ராவின் தந்தை கொரோனாவால் கடந்த 10ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது மகளும் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல திரைப்பட பாடகி கொரோனாவால் மரணம்;தந்தையும் கொரோனாவுக்கு பலி

குலாநந்தன் எனும் ஒடியா படத்தில் அறிமுகமானவர் தபு மிஷ்ரா. ஒடியாவில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இந்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

பிரபல திரைப்பட பாடகி கொரோனாவால் மரணம்;தந்தையும் கொரோனாவுக்கு பலி

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தபு மிஸ்ராவின் உடல்நிலை, கடந்த மாதம் 19ம் தேதி மிகவும் மோசமடைந்ததால் ஆக்சிஜன் அளவு 45க்கும் கீழ் சென்றதால், அவர் புனவேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததால் வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல திரைப்பட பாடகி கொரோனாவால் மரணம்;தந்தையும் கொரோனாவுக்கு பலி

தமி மிஷ்ராவின் தந்தை கொரோனாவல் கடந்த 10ம் தேதி உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் தபு மிஷ்ரா உயிரிழந்துள்ளதால், அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவங்களால் தபு மிஷ்ராவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர்.