‘’பொறுக்கிகள் போராளிகளைக் கொல்லமுடியும்.. வெல்லமுடியாது’’-திருமாவளவன்

 

‘’பொறுக்கிகள் போராளிகளைக்  கொல்லமுடியும்.. வெல்லமுடியாது’’-திருமாவளவன்

ஜூன் 18, தம்பி முடக்காத்தான் பாண்டியன் நினைவு நாள். சாதி ஒழிப்புக் களத்தில் சாவு கண்ட போராளி; தம்பி முடக்காத்தான் பாண்டியனுக்கு செம்மாந்த வீரவணக்கம் என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

‘’பொறுக்கிகள் போராளிகளைக்  கொல்லமுடியும்.. வெல்லமுடியாது’’-திருமாவளவன்

அவர் மேலும், கட்சிக்கும் தலைமைக்கும் நம்பிக்கைக்குரிய போராளியாக இருந்தார் முடக்காத்தான் பாண்டியன். பகைவரால் வெல்லமுடியாத களப்போராளி தம்பி முடக்காத்தான் பாண்டியனுக்கு வீரவணக்கம் என்று தெரிவித்துள்ள திருமாவளவன், ‘’பொறுக்கிகள்-போராளிகளைக் கொல்லமுடியும்! வெல்லமுடியாது! ’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘’பொறுக்கிகள் போராளிகளைக்  கொல்லமுடியும்.. வெல்லமுடியாது’’-திருமாவளவன்

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொருளாளராக இருந்தவர் முடக்காத்தான் பாண்டியன். அவர் கொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில், கடந்த 2001ம் ஆண்டில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே தூத்துக்குடி புதூர்பாண்டியபுரத்தைச் சேர்ந்த புதியதமிழகம் பிரமுகர் ராமன் கொலை செய்யப்பட்டார், அடுத்து சில நாட்களிலேயே மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொருளாளர் முடக்காத்தான் பாண்டியன் கொலை செய்யப்பட்டார், அடுத்து ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்த கணேச பாண்டியன், வெள்ளை ஆகியோர் குண்டு வீசிகொலை செய்யப்பட்டனர், நெல்லை கருங்காடு பகுதியைச் சேர்ந்த புதிய தமிழகத்தின் முன்னோடிகள் முனுசாமி, சுரேஷ் கொல்லப்பட்டனர் என்று சொன்னர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,

‘’பொறுக்கிகள் போராளிகளைக்  கொல்லமுடியும்.. வெல்லமுடியாது’’-திருமாவளவன்

இந்த தாக்குதல்களில் இருந்து தலித்மக்களைக் காக்க ஒரே வழி அவர்களுக்கு தமிழக அரசு துப்பாக்கிகள் வழங்குவதுதான். இதுபோன்ற நடைமுறைகள் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளன என்று சொல்லி அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆண்டுதோறும் முடக்காத்தான் பாண்டியன் நினைவுநாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.