அவர்களின் ஆட்சிதான் அமைய வேண்டும்…வெளிப்படையாக சொன்ன ராமதாஸ்

 

அவர்களின் ஆட்சிதான் அமைய வேண்டும்…வெளிப்படையாக  சொன்ன ராமதாஸ்

எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம் அது, ஒரு ஏழைக் குடும்பம் என்று இரண்டு உண்மைச்சம்பவங்களை உருக்கமுடன் சொல்லியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இரண்டு சம்பவங்களையும் சொல்லி, இந்த நிலை மாற வேண்டும் என்றால் அவர்களின் ஆட்சி அமைய வேண்டும் என்று தனது சொல்லி இருக்கிறார்.

அவர்களின் ஆட்சிதான் அமைய வேண்டும்…வெளிப்படையாக  சொன்ன ராமதாஸ்

தமிழ்நாட்டின் குடிமகன்கள் இப்போதெல்லாம் மதுவகையின் தரப்பெயரைக் கூட படித்துப் பார்ப்பதில்லை. 100 ரூபாய் குவார்ட்டர், 120 ரூபாய் குவார்ட்டர், 140 ரூபாய் குவார்ட்டர் என்று தான் கேட்டு வாங்கிக் குடிக்கிறார்கள். மதுவின் தரப்பெயரையே பார்க்காதவர்கள் மதுபுட்டியின் கீழ்ப் பகுதியில் எழுதப்பட்டிருப்பதை நிச்சயம் படித்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மதுவை விற்கும் அரசு தான் இந்த வாசகத்தை உருவாக்கியது என்றாலும் வீட்டு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு ஏற்பட்டாலும் அதற்குக் கவலையில்லை… மது ஆலை அதிபர்கள் நலனை மற்றும் பாதுகாத்தால் போதுமானது. ஆனால், மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு என்பது மிகவும் பொருத்தமான வாசகம். அது நாடு, வீடு, உயிர் என அனைத்தையும் அழிக்கும் என்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. – குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் எவ்வாறு சீரழிகின்றன என்பதற்கு எனக்குத் தெரிந்த இரு உதாரணங்களை நான் கூறுகிறேன் என்று ராமதாஸ் சொல்லும் உண்மைச்சம்பவங்கள்;

அவர்களின் ஆட்சிதான் அமைய வேண்டும்…வெளிப்படையாக  சொன்ன ராமதாஸ்

முதல் உதாரணம்:
எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம் அது. கணவன் முழுநேர குடிகாரன். 3 மாதங்களுக்கு சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் சென்று விடுவான். அங்கு வேலை செய்வானோ, குடித்து விட்டு விழுந்து கிடப்பானோ தெரியாது. 3 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவான். அவ்வாறு வரும் போது குடும்பச் செலவுகளுக்கு 10 பைசா கூட தர மாட்டான். மாறாக மனைவி ஆடு மேய்த்து சம்பாதித்து வைத்திருக்கும் காசை பிடுங்கி குடிப்பான்; மனைவி மக்களை கொடுமைப் படுத்துவான்; மனைவிக்கு குழந்தையை கொடுத்து விட்டு மீண்டும் ஓடிவிடுவான்.
இப்படியாக அவனது மனைவிக்கு 5 பெண் குழந்தைகள். 4 குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. கடைசி மகள் மட்டும் பிஎஸ்சி பிஎட் படித்தார்.

அனைத்து பெண்களுக்கும் திருமணம் முடிவடைந்து விட்டது. அவர்களில் இரு பெண்களின் கணவர்கள் குடிக்கு அடிமையானவர்கள். அவர்களில் ஒரு பெண்ணிடம் ஒரு நாள் குடிப்பதற்காக ரூ.100 பணம் கேட்டிருக்கிறான் அவரின் கணவன். மனைவியிடம் பணம் இல்லை. அதனால் பணம் தர மறுத்தார். இருவருக்கும் சண்டை மூண்டது. குடிப்பவனுக்கு மூளை இருக்காது அல்லவா? ஆத்திரத்தில் மனைவி, குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டான். அவனது குடும்பமே இப்போது அனாதையாகி விட்டது.

அவர்களின் ஆட்சிதான் அமைய வேண்டும்…வெளிப்படையாக  சொன்ன ராமதாஸ்

கணவனை இழந்த மனைவி பெரும் போராட்டத்திற்குப் பிறகு சத்துணவுப் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். அந்த பெண்ணின் 7 வயது மகன் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. அவனிடம் ஒரு நாள் தொலைபேசியில் பேசும் போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவன், ‘‘ மாட்டுக்கு கயிறு திரித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றான். எனது மனம் வேதனையில் துடித்தது. தம்பி நீ படிக்கவில்லையா? என்று கேட்டால் ‘‘ பள்ளிக்கூடம் தான் மூடியிருக்கிறதே. அதுமட்டுமின்றி எனக்கும் படிப்பு வரவில்லை. அதனால் தான் கயிறு திரிக்கிறேன்’’ என்று பதிலளித்தான். ஒரு குடும்பத்தலைவனின் குடிப்பழக்கத்தால் மூன்றாவது தலைமுறை வரை முன்னேற முடியாத அளவுக்கு குடும்பம் சீரழிந்திருக்கிறது.

இரண்டாவது உதாரணம்:

ஒரு ஏழைக் குடும்பம். குடும்பத் தலைவன் குடிகாரன். குடும்பப் பொறுப்பு இல்லாதவன். குடித்து விட்டு குடும்பத்தினரை கொடுமை செய்வதைத் தவிர நன்மை எதையும் செய்ய மாட்டான். மனைவி தான் மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். அந்த இணையருக்கு 10 வயதில் ஒரு மகள். 4 வயதில் ஒரு மகன். குடிகார தந்தையை எந்த பிள்ளை தான் மதிக்கும்? அந்தக் குடும்பத்திலும் அது தான் நடந்தது. அந்த தந்தையை எந்தக் குழந்தையும் மதிப்பதில்லை.

அவர்களின் ஆட்சிதான் அமைய வேண்டும்…வெளிப்படையாக  சொன்ன ராமதாஸ்

குடிகாரத் தந்தையின் 10 வயது மகளிடம் உன் தந்தை எங்கே? என்று கேட்டால், ‘‘அவன் குடித்து விட்டு எங்காவது விழுந்து கிடப்பான்’’ என்று தான் பதில் வரும். குழந்தைகளைப் பொறுத்தவரை தந்தை தான் முதல் ஆசிரியர்… முதல் கதாநாயகன். ஆனால், கதாநாயகனாக பார்க்கப்பட வேண்டிய தந்தையை குடிகாரனாக பார்த்து குழந்தையே வெறுக்கும் நிலையை உருவாக்கியது மது தான். அதனால் தான் சொல்கிறேன்… மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு ஆகும்.

தமிழ்நாட்டில் இத்தகைய அவலநிலை நிலவுவதற்கு காரணம் தமிழ்நாட்டில் கடந்த 1971&ஆம் ஆண்டில் தொடங்கி இடையில் சில ஆண்டுகள் தவிர மீதமுள்ள எல்லா காலத்திலும் தமிழ்நாட்டை மது வெள்ளத்தில் மூழ்க வைத்த ஆட்சியாளர்கள் தான் காரணம் ஆவர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் குடிப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். அவர்களில் மேலே நான் குறிப்பிட்ட உதாரணங்களைப் போல லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கும். அதைக்கண்டு ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. மாறாக, மது ஆலை அதிபர்கள் குறித்து தான் கவலைப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தமிழ்நாட்டில் மதுவை எதிர்ப்பவர்களின் ஆட்சி அமைய வேண்டும்.