’’அடிபணிந்துவிட்டார்; ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொண்டுவிட்டார்’’

’’அடிபணிந்துவிட்டார்; ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொண்டுவிட்டார்’’

நடந்து முடிந்த தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜகவும் கூட்டணி வெற்றி பெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி கொரோனாவினால் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் கொல்லைப்புறமாக வந்து பாஜக ஆட்சி அமைக்க முயல்கிறது என்ற பேச்சு எழுந்தது. பின்னர் விரைவில் குணமடைந்து வந்த ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார்.

’’அடிபணிந்துவிட்டார்; ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொண்டுவிட்டார்’’

ரங்கசாமி பதவியேற்றாலும் அமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவி கேட்டு பாஜகவினர் தொடர் இழுபறியில் இருந்து வந்தனர். அமைச்சரவையில் பாஜகவுக்கு இடம் கொடுத்த ரங்கசாமி, சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்திருக்கிறார்.

சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு கொடுக்க என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால், சபாநாயகர் பதவிக்கு நடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், பாஜக எம்.எல்.ஏ ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

’’அடிபணிந்துவிட்டார்; ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொண்டுவிட்டார்’’

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

’’அடிபணிந்துவிட்டார்; ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொண்டுவிட்டார்’’

இதுகுறித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’சபாநாயகர் பதவியை என்.ஆர்.காங்கிரஸ் விட்டுக்கொடுத்ததால் கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ரங்கசாமி பாஜகவிற்கு முற்றிலுமாக அடிபணிந்துவிட்டார். சபாநாயகர் பதவியை பாஜகவிற்கு விட்டு கொடுத்திருப்பதன் மூலம் தனது ஆட்சிக்கான முடிவுரையை அவரே எழுதிக் கொண்டுவிட்டார். இவர்கள் கையில் சிக்கியிருக்கும் புதுச்சேரி மக்களை நினைத்தால் கவலையாக உள்ளது. கடுமையான கொரனாதொற்று காலத்தில் கூட பாஜகவின் அதிகாரவெறியால் புதுச்சேரி அரசு முடங்கிக்கிடக்கிறது.’’என்று தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.