அச்சுறுத்தலால் முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

 

அச்சுறுத்தலால் முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பினை வழங்குகிறது மத்திய அரசு.

அச்சுறுத்தலால் முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

முதல்வர் ஆனபின்னர் ஸ்டாலின் முதன்முறையாக டெல்லி பயணம் சென்றிருக்கிறார். இன்று காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட ஸ்டாலின், காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் இன்று இரவு ஓய்வெடுக்கும் முதல்வர், நாளை சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்து பேசுகிறார். ஸ்டாலின் டெல்லி வருகையை முன்னிட்டு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பினை வழங்குகிறது மத்திய அரசு.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இசட் பிளஸ் பாதுக்காப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த பாதுக்காப்பு போதாது என்று எஸ்.எஸ்.ஜி எனும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினையும் உருவாக்கி இருந்தார் ஜெயலலிதா. போலீசில் தேர்ந்தெடுக் கப்பட்டவர்களை கொண்டு முழுக்க முழுக்க முதல்வருக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த பிரிவினை விஜயகுமார் ஐபிஎஸ் வடிவமைத்தார். இப்பிரிவின் 700 போலீசாருக்கு மேல் பணிபுரிந்து வந்தனர்.

அச்சுறுத்தலால் முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

கருணாநிதி முதல்வராக வந்த பின்னர், எஸ்.எஸ்.ஜி. படையினை ‘கோர்செல்’ படையாக மாற்றினார். 700 போலீஸ் என்பதை 140 போலீசாக குறைத்தார். பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கோர்செல் பெயரை மாற்றவில்லை. ஆனால், கோர்செல் பிரிவின்போலீசார் எண்ணிக்கையை உயர்த்தினார்.

அச்சுறுத்தலால் முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

ஜெயலலிதா, கருணாநிதியை அடுத்து தமிழகத்தில் சுப்பிரமணியன் சாமி, ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் ஸ்டாலின், ஓபிஎஸ் இருவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது. சுப்பிரமணியன் சாமிக்கு மட்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு தொடர்கிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கும் கோர்செல் பிரிவு போலீசார்தான் பாதுகாப்பு அளித்து வந்தனர். ஸ்டாலின் முதல்வரான பின்னர் அவருக்கும் கோர்செல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.பி., ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள் 2 பேர், மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இந்த பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இது தவிர, எஸ்.சி.பி. எனும் செக்யூரிட்டி சென்னை போலீஸ் பிரிவு பாதுகாப்பு இருக்கிறது.

இந்நிலையில், பிரதமரை சந்திக்க இன்று டெல்லி சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தினால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பினை வழங்குகிறது மத்திய அரசு.