கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு

கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு

அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையினை திறந்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரவர் வீட்டு முன்பாக நின்று கருப்பு கொடி காட்டி, எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர் திமுகவினர். தற்போது திமுக ஆட்சியில் அதிமுக செய்ததை போலவே கொரோனா காலத்தில் திமுக அரசும் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டதால், அவரவர் வீட்டு முன்பாக நின்று எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர் பாஜகவினர்.

கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு

மத்திய அரசு என்று இத்தனை காலமும் சொல்லி வந்த திமுக, இப்போது ஒன்றிய அரசு சொல்லி வருகிறது.

இந்த விவகாரங்கள் குறித்து பேசியுள்ள பாஜக பிரமுகர் குஷ்பு, ’’புதிதாக திருமணம் செய்துகொண்ட ஜோடிகளை மூன்று மாதம் வரைக்கும் எதுவும் சொல்ல மாட்டோம். அந்த மூன்று மாதமும் தேனிலவு காலம் என்று சொல்லி, கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம். அதேபோலத்தான் திமுக இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பதால் அதற்கு இது தேனிலவு காலம். இந்த தேனிலவு காலத்தில் விமர்சிக்க வேண்டாம்.

கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு

இந்த தேனிலவு காலத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். அதனால் விட்டுவிடுவோம். அதன்பின்னர் அவரக்ளின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்கலாம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பார்கள்; விட்டுவிடுவோம்… குஷ்பு

அதே நேரம், காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகள் மத்திய அமைச்சர்களாக திமுகவினர் இருந்தபோது ஒன்றி அரசு, ஒன்றிய அமைச்சர்கள் என்று திமுக சொல்லி இருக்கலாம் என்றும், எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டபோது ஸ்டாலின் நடத்திய போராட்டமும், வெளியிட்ட கார்ட்டூன்களும் மறந்து போகுமா என்ன? என்றும் கேட்கிறார் குஷ்பு.