’’அன்று விபீஷணன் சரணாகதி இன்று ஸ்டாலின் சரணாகதி ’’

 

’’அன்று விபீஷணன் சரணாகதி இன்று ஸ்டாலின் சரணாகதி ’’

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்ததை அடுத்து நாளை மறுதினம் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாளை மாலை சிறப்பு விமானத்தின் மூலம் டெல்லி செல்கிறார் ஸ்டாலின்.

’’அன்று விபீஷணன் சரணாகதி இன்று ஸ்டாலின் சரணாகதி ’’

டெல்லியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஸ்டாலின், நாளை மறுதினம் காலையில் லோக் கல்யாண் மார்க்கில் இருக்கும் பிரதமரின் இல்லத்தில் மோடியுடனான சந்திப்பு நிகழ்கிறது. தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் ஸ்டாலினை , தனது சிறப்பு பாதுகாப்பு படையின் புல்லட் புரூப் காரை அனுப்பி அதில் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார் பிரதமர். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பின்னர் இந்த மரியாதை ஸ்டாலினுக்கு கிடைக்கிறது.

பிரதமர் இல்லத்தில் ஒரு மணி நேரம் நடைபெற இருக்கும் இந்த சந்திப்பில், முதல்வருடன் மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள். அதன்பின்னர் ஸ்டாலினுடன் பிரதமர் தனியாக பேசுவதற்கு 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

’’அன்று விபீஷணன் சரணாகதி இன்று ஸ்டாலின் சரணாகதி ’’

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “Go Back Modi”தமிழகம் வந்த விருந்தினரை விரட்டிய ஸ்டாலின் செயல் “கழகக் கலாச்சாரம்” என்றும், “Welcome Stalin” என்று டெல்லி செல்லும் விருந்தினரை வரவேற்கும் மோடியில் செயல் “காவிக்கலாச்சாரம்” என்றும் தெரிவிக்கிறார்.

அவர் மேலும், அன்று விபீஷணன்சரணாகதி இன்று #ஸ்டாலின்சரணாகதி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

https://twitter.com/SRSekharBJP/status/1404744194082492420