நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்.. 2743 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

 

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்.. 2743 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

சென்னையில் தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை 1971 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் வந்துள்ளது. 8158 சமூக விரோதிகளை கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் 12 லட்சத்து 87 ஆயிரம் பேர் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருக்கிறார்கள். மாற்றுதிறனாளிகள் மொத்தம் 4 லட்சத்து 81 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார துறையுடன் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது என்று கூறினார்.

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்.. 2743 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

தொடர்ந்து பேசிய அவர், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,29,43,512. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3,09,95, 440. பெண் வாக்காளர்கள்- 3,19,40,880. பெண் வாக்காளர்கள் இந்த முறை 10% அதிகமாக இருக்கிறார்கள். 7255 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் 4512 பேர் மனு ஏற்கப்படுள்ளது. 2743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரை 83.99 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி 130.90 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.