முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?கமல்

 

முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?கமல்

மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?என்று கேட்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?கமல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் அவரை விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடுவது கண்டிக்கத்தக்கது என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?கமல்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனிடம் சின்ன விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன் 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி இரவு சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவு , பேரறிவாளனின் பெற்றோரிடம் கூறியது. ஆனால், ராஜீவ் கொலை குறித்த சில விளக்கங்களைப் பெறுவதற்கான விசாரணை என்று அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தைத் திரித்து எழுதி அவரை கொலை வழக்கில் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனும், மேலும் 6 தமிழர்களும் வரை 30 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு முன் சிறை சென்ற மகன் பேரறிவாளன் விடுதலையாகி வீடு திரும்புவதைக் கண்டு அவரது வயது முதிர்ந்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசியல் பிரபலங்கள் அல்லாமல் திரையுலகினரும் பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அற்புதம்மாள் போராட்டம் குறித்து கமல்ஹாசனும் பதிவு செய்திருக்கிறார். அவரின் கண்ணீருக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.