அமைதியான பெருந்தொற்று.. அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்

 

அமைதியான பெருந்தொற்று.. அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்

டெல்லியில் எல்லை சாலை அமைப்பின்(பி.ஆர்.ஓ.) இரண்டு சீர்மிகு மையங்களை டெல்லியில் உள்ள சீமா சடக் பவனில் பாதுாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்து பேசியபோது, சாலை பாதுகாப்பில் மிகச் சிறப்பான நிலையை அடையவும், சாலைகள், பாலங்கள், விமானத் தளங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் கட்டுமானத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த இந்த மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றார்.

அமைதியான பெருந்தொற்று.. அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்

சாலை விபத்துக்கள் பற்றிய ஆய்வு தகவல்களை பகிர்தல், விலைமதிப்பற்ற உயிர்களை காப்பதற்கான முறைகளை பரிந்துரைத்தல் மூலம் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இந்த சீர்மிகு மையத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களின் உயிர்களை காப்பதில் இந்த மையங்கள் முக்கிய பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சாலை விபத்துக்களை, அமைதியான தொற்று நோய் என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 1.5 லட்சம் பேர் இறப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

அமைதியான பெருந்தொற்று.. அமைச்சர் சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகத்தில் இருக்கும் மொத்த வாகனங்களில் 3% மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், சர்வதேச அளவில் ஏற்படுகின்ற சாலை விபத்துகளில் 11 % நம் நாட்டில் நிகழ்கின்றன. இதில், ஒவ்வொரு வருடமும் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அமைதியான பெருந்தொற்றாகவே நாட்டில் சாலை விபத்துகள் இருக்கின்றன என்றும் அவர் கவலை தெரிவித்தார்

இந்த நிலையினை தடுப்பதற்காக, தேசிய சாலை பாதுகாப்பு கொள்கை, மோட்டார் வாகன சட்டம் 2020 மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பகுதிகளை கண்டறிதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தற்போது மற்றொரு முக்கிய நடவடிக்கையாகயாகத்தான் இந்த சீர்மிகு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.