ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை உடனே அமல்படுத்தணும்; மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை உடனே அமல்படுத்தணும்;  மம்தாவுக்கு  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தக்கூடிய திட்டமான, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுவந்தது. மேற்கு வங்க அரசாங்கம் மட்டும் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல், இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை உடனே அமல்படுத்தணும்;  மம்தாவுக்கு  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தினால் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக மம்தா சொல்லிவந்தார். வேண்டுமென்றே இத்திட்டத்தினை அமல்படுத்தாமல் மம்தா அரசியல் செய்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதனால், அரசு உதவிகளை பெறுவதற்காக அமைப்பு சாரா தொழிலாளர்களின் பதிவு நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் இன்று விசாரணை நடந்தது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை உடனே அமல்படுத்தணும்;  மம்தாவுக்கு  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த விசாரணையில், மேற்கு வங்காள மாநிலத்தில் ’ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை எந்தவித காரணமும் சொல்லாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதை அமல்படுத்தாமல் எந்த ஒரு சிக்கலையும் மேற்கோள் காட்ட கூடாது. புதிய பிரச்சனைகள் எதுவும் சொல்லக்கூடாது. இந்த திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆனது. அவர்களுக்கு பயன்படும் திட்டம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் வாதப் பிரதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பினை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. மேற்கு வங்காள அரசின் முடிவிற்கு பின்னர் நீதிபதிகள் வழக்கில் தீர்ப்பினை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.