’’மாடு மேய்க்கிறவன் ஊராட்சி மன்றத்தலைவரா?’’

 

’’மாடு மேய்க்கிறவன் ஊராட்சி மன்றத்தலைவரா?’’

ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும், தலைவர் நாற்காலியில் உட்கார கூடாது என்று தரையில் அமரவைப்பதும், அதையும் மீறி நாற்காலியில் அமர்ந்துவிடுவார்கள் என்று ஊராடி மன்ற அலுவலகங்களையே பூட்டி வைக்கும் அவலம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

’’மாடு மேய்க்கிறவன் ஊராட்சி மன்றத்தலைவரா?’’

திருவண்ணாமலை மாவட்டத்திலும் அந்த அவலம் அரங்கேறி இருக்கிறது. அம்மாவட்டத்தின் பு. பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஏழுமலை. இவரை மாடுமேய்க்கிறவன் என்று பேசியும், மாடு மேய்க்கிறவனுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவியா என்று கேட்டும் அவமானப் பத்தியுள்ளார் ஊராட்சி செயலாளர். மேலும், ஏழுமலை தலைவர் இருக்கையில் அமரக்கூடாது என்பதற்காகவே அலுவலகத்தை பூட்டியும் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

’’மாடு மேய்க்கிறவன் ஊராட்சி மன்றத்தலைவரா?’’

இதுகுறித்து அறிந்ததும் வெடித்திருக்கிறர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இந்த பிரச்சனைக்கு தீர்வு முதல்வருக்கு கோரிக்கையும் விடுத்திருக்கிறார். ‘’மாடுமேய்க்கிறவன் ஊராட்சி மன்றத்தலைவரா என்று திருவண்ணாமலை பு பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ஏழுமலை அவர்களை அவமானப்படுத்தி, தலைவர் இருக்கையில் அமரவிடாமல் தடுத்து, அலுவலகத்தையும் பூட்டிய சாதிய மனநோயாளியான ஊராட்சி செயலாளரை உடனே சிறைப்படுத்த தமிழக அரசை வலியுறுத்துகிறோம்’’ என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார் .