சென்னையில் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு வந்தது!

 

சென்னையில் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு வந்தது!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவிப்பின் படி சென்னையில் இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னையில் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு வந்தது!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூன் 7 தேதிவரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்தது. இதை தொடர்ந்து வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழலில் பல்வேறு நபர்கள் இபாஸ் விண்ணப்பித்து பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் சாலைகளில் வாகனங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு வந்தது!

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் “ஊரடங்கு பொறுத்தவரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வாகன தணிக்கையின் போது தடுப்பு அமைத்து சோதனை செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தளர்வுகளின் படி பொதுமக்கள் பலரும் இ-பதிவு பெற்று பணிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 8ஆம் தேதி முதல் சென்னையில் அனைத்து சிக்னல்களும் பயன்பாட்டுக்கு வரும். ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்கள் எந்தவித சோதனையுமின்றி அனுப்பப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டு மற்றும் மண்ணடியில் பணியில் இருந்த போலீசாரிடம் தகராறு செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.