“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

 

“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

தமிழ்நாட்டில் எந்த அறிவிப்பும் வந்தாலும், “அன்றே அறிக்கை விடுத்தேன்; இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” என்று அறிக்கைக்கு ஒரு அறிக்கை விடுவார்கள் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணி ராமதாஸும். தற்போது அதே பாணியில் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதையொட்டி இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியிருக்கிறார்.

“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களில் ஓரிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

இதற்காக உச்ச நீதிமன்றத்தில் நான்தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தேன் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி உயர் நீதிமன்றத்திலும் நான் வழக்குத் தொடர்ந்தேன். தமிழகத்தின் பிற கட்சிகளும் இதே வழக்கைத் தொடர்ந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட்டது. அதன் பின்னர் ஓராண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், இப்போது தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.

“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

இந்த இட ஒதுக்கீடு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கும். இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரி முதன்முதலில் வழக்குத் தொடர்ந்த பாமகவுக்கும், தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.