டாஸ்மாக் கடை திறப்பு எப்போது? வெளியானது சுற்றறிக்கை

 

டாஸ்மாக் கடை திறப்பு எப்போது? வெளியானது சுற்றறிக்கை

ஊரடங்கு தளர்வுகளில் டாஸ்மாக் கடை எப்போது திறக்கப்படும் என்று சொல்லப்படாத நிலையில், சில பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்ற தகவல் வெளியான நிலையில் அதுகுறித்த விளக்க சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம்.

ஜூன் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரைக்கும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஊரடங்கு நீட்டிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடை திறப்பு எப்போது? வெளியானது சுற்றறிக்கை

அரசு அலுவலகங்கள் அனைத்தும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தனியாக செயல்படுகின்ற மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும், காய்கறி, பழங்கள், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மின்பொருட்கள் மற்றும் பல்புகள், விற்பனை செய்யும் எலக்ட்ரிக்கல் கடைகள், மிதிவண்டி, டூவீலர்கள் பழுது நீக்கும் கடைகளூம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஹார்டுவேர் கடைகளும், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரைக்கும் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.

டாஸ்மாக் கடை திறப்பு எப்போது? வெளியானது சுற்றறிக்கை

கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனையகங்களுக்கும் இதே போல் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஜவுளிக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை, சலூன்கடை போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு சில பகுதிகளில் தளர்வு அளிக்கப்பட்டு திறக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதை மறுத்திருக்கும் டாஸ்மாக் நிர்வாகம். மறு உத்தரவு வரும் வரைக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.