Home தமிழகம் நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்

நான் முதல்வராக இருந்தபொழுது… எடப்பாடியாரின் நினைவுகள்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இதை முன்னிட்டு கனிமொழி எம்.பி. , தூத்துக்குடி மாநகராட்சி பாளை சாலை பகுதியில் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பங்களிப்புடன் மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்
நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்

அது குறித்து அவர், பருவ நிலைமாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்கிறோம். கடல் மட்டம் உயர்தல், அதிகரித்துவரும் காட்டுத்தீக்கள், மிக அதிக மழை மற்றும் புயல், அதீத வறட்சி என மாறி மாறி ஏற்படும் இயற்கை சீற்றங்கள், “இந்த பூமியையைக் காக்க, இன்றே செயல்படுங்கள்” என்றே வலியுறுத்துகின்றன. இந்த பூமியை நம் வருங்கால சந்ததியினருக்கு, ‘வாழத் தகுந்த’ இடமாக விட்டுச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாநகராட்சி பாளை சாலை பகுதியில் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பங்களிப்புடன் மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தோம் என்று கூறியிருக்கிறார்.

நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்

இந்த உலகம் மனிதர்கள், விலங்குகள்,பறவைகள், தாவரங்கள், பல்லுயிர்கள், அனைவருக்குமானது. மண், நீர், மலை, காற்று, ஆகாயம் இவற்றை மாசுபடாமல் காக்க வேண்டியது நமது கடமை. இந்த புரிதலோடு சுற்றுச்சூழலைக் காக்க உறுதியேற்போம் என்கிறார் ஜோதிமணி எம்.பி.

நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்

சூழல் மண்டலங்களின் மறு உருவாக்கத்திற்கான பத்தாண்டுகள்(UN Decade on Ecosystem Restoration 2021-2030)எனும் பிரச்சாரத்தை உலக சுற்றுச்சூழல் தினமான இன்று ஐ.நா. தொடங்குவது வரவேற்கத்தக்கது. அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்

அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நான் முதல்வராக இருந்தபொழுது, இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததை இன்று நினைவு கூறுகிறேன். இந்நாளில்,நாம் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி ஏற்போம். மரம் நடுவோம், இயற்கையையும், சமுதாயத்தையும் காப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்
நான் முதல்வராக இருந்தபொழுது... எடப்பாடியாரின் நினைவுகள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...

சமோசா திடீர் விலை உயர்வால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

திடீரென சமோசா விலை உயர்ந்ததால் அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம்...

நடிகர் ஆர்யா மீது புகார்- சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews