ஜம்பம் காட்டியது போதும்… அமைச்சர் பிடிஆரை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

 

ஜம்பம் காட்டியது போதும்…  அமைச்சர் பிடிஆரை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

சமூக வலைதளத்தில் தீவிர பங்கேற்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அதுதான் இப்போது முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவும் காரணமாக அமைந்திருக்கிறது. பிடிஆரின் சமூக வலைத்தள சலசலப்புகள் குறித்து ஸ்டாலினிடம் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள் திமுக சீனியர்கள். தானும் அதை கவனித்து வருவதாக தெரிவித்த ஸ்டாலின், பிடிஆரை அழைத்து, டுவிட்டரிலும் மீடியாக்கள் முன்பும் ஜம்பம் காட்டியது போதும். பட்ஜெட் கூட்டத்தொடரில் உங்க திறமையை காட்டுங்க என்று கண்டித்து அனுப்பியிருக்கிறாராம்.

ஜம்பம் காட்டியது போதும்…  அமைச்சர் பிடிஆரை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தான் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். ஈஷா அறக்கட்டளை சத்குரு குறித்த தகவல்களை வெளியிடப்போவதாக பரபரப்பூட்டியவர், அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததும் சத்குரு குறித்து இனிமேல் எதுவும்பேசமாட்டேன் என்று அந்தர் பல்டி அடித்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்திக்கு உள்ளான பிடிஆர், முதல்வர் எனக்கு பெரிய பொறுப்பை வழங்கியிருக்கிறார். அதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். தேவையில்லாத விசயங்களில் தலையிடுவது என் பதவிக்கு அழகல்ல என்று அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் அதற்கு பின்னரும் அவர் தொடர்ந்து அரசியலிலும் சமூகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஜம்பம் காட்டியது போதும்…  அமைச்சர் பிடிஆரை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

சத்குரு விவகாரம் குறித்து பிடிஆர் பேசியதால், பாஜக தரப்பில் பிடிஆரின் குடியுரிமை விவகாரத்தை எடுத்து விவாதித்தனர். இதுகுறித்து எச்.ராஜாவும் பேசியிருந்தார். அந்த நிலையில் எச்.ராஜா குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, வெறிபிடித்த நாய் குறைகும் போதெல்லாம் அது பற்றி கருத்து கேட்டால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது. நாய் குறைப்பதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்றார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 43 ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தின் போது தமிழக நிதியமைச்சர் தன்னை வாயை மூடு என்று கூறியதாகவும், கோவா ஒரு சிறிய மாநிலம் என்று கூறி அவமதித்ததாகவும், கோவா போக்குவரத்து அமைச்சர் மவுவின் கோடின்ஹோ குற்றஞ்சாட்டினார். ஆனால், இவை ஆதாரமற்ற பொய்கள் என்று பதில் கூறினார் பிடிஆர்.

ஜம்பம் காட்டியது போதும்…  அமைச்சர் பிடிஆரை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

மேலும், கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர், நான் கோவா மக்களை அவமானப்படுத்தியாக வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்க விரும்புகிறேன். அதோடு இது போன்ற நபர்களால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

இதையடுத்து, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஜி.எஸ்.டி கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நமது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம். நமது மாநிலத்தின் பெருமையை இந்த செயல் கெடுக்கிறது. பிடிஆர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பிடிஆர், உங்கள் பொய்களில் என்னை டேக் செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு மாறுதலுக்காக உண்மையாக வேலை செய்ய முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே ஒரு பிறவிப்பொய்யரா? அல்லது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் யாரோ ஒருவர் யாரையோ அவமதித்து விட்டதாகக் கருதும் அளவுக்குக் குறைந்த ஐ.க்யூ கொண்டவரா? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு, வானதி சீனிவாசனை ஹ்டனது டுவிட்டரில் இருந்து பிளாக் செய்திருந்தார் பிடிஆர்.

ஜம்பம் காட்டியது போதும்…  அமைச்சர் பிடிஆரை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

பிடிஆர் தன்னை ட்விட்டரில் ப்ளாக் செய்த ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்ட வானதி, நமது நிதியமைச்சரால் விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதது வருத்தமளிக்கிறது. நீங்கள் என்னைப் பொய் கூறுபவர் அல்லது குறைந்த ஐ.க்யூ கொண்டவர் என அழைக்கலாம். ஆனால், இதனால் உண்மை மாறாது. ஹெச். ராஜா மற்றும் ஜக்கி வாசுதேவ் குறித்த உங்கள் கருத்துக்கள் உங்களது மோசமான தன்மையை வெளிப்படுத்துகின்றன கடுமையாக கூறியிருந்தார்.

இப்படியான தொடர் சலசலப்புகளை ஏற்படுத்தி வந்ததால்தான், பிடிஆரை நேரடியாகவே அழைத்து முதல்வர் கண்டித்து அனுப்பியிருக்கிறாராம்.