சசிகலா -ஓபிஎஸ் பேசிய ஒரு மணி நேர ஆடியோ

 

சசிகலா -ஓபிஎஸ் பேசிய ஒரு மணி நேர ஆடியோ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீது பல ஆயிரம் அதிமுகவினர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்கிறார் பாண்டிய மண்டலத்தை சேர்ந்த அந்த அதிமுக மாஜி அமைச்சர். சசிகலா பக்கம் சாய்ந்திருக்கும் 6 மாஜி அமைச்சர்களில் அவரும் ஒருவர்.

சசிகலா -ஓபிஎஸ் பேசிய ஒரு மணி நேர ஆடியோ

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மா.செ.க்கள் என மொத்தம் 8,227 பேர் விருப்ப மனு கொடுத்து காத்திருந்தும் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கிறார்கள் என்கிறார். அத்தனை பேருக்கும் சீட் கொடுக்க முடியாது என்பது அவர்களுக்கும் தெரியாமலில்லை. முறையாக அழைப்பு விடுத்து முறையாக நேர்காணல் நடத்தி இல்லை என்று கூட சொல்லியிருந்தால் ஒரு ஆறுதலாக கூட இருந்திருக்கும். முறையான ஒரு நேர்காணலும் நடத்தாததால் தான் அவர் எடப்பாடி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள் என்கிறார்.

மேலும், இப்படி அதிருப்தியில் இருப்போரின் மொத்த லிஸ்ட்டையும் சசிகலா கலெக்ட் செய்திருக்கிறார். இந்த லிஸ்ட்டை கலெக்ட் செய்து கொடுத்திருப்பதே அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர்தான். அப்படி இருக்கையில், சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டன் கூட செவிசாய்க்க மாட்டான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் முனுசாமி.

சசிகலா -ஓபிஎஸ் பேசிய ஒரு மணி நேர ஆடியோ

தனக்கு கிடைத்த லிஸ்ட்டை வைத்துக்கொண்டுதான் ஓவ்வொருவரிடமும் பேசிவருகிறார் சசிகலா. முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ வெளிவரவில்லை. அது வெளிவரவும் வாய்ப்பில்லை. தேவைப்பாட்டால், ஓபிஎஸிடம் அவர் பேசிய ஆடியோ கசியவும் வாய்ப்பிருக்கிறது.

சசிகலா பக்கம் சாய்ந்திருக்கும் ஓபிஎஸ், திடீரென்று இபிஎஸ் -முனுசாமி பக்கம் சாய்ந்தால் அந்த ஆடியோ கசிய வாய்ப்பிருக்கிறது. மேலும், ஒரு பெரும் அதிர்வினை ஏற்படுத்தி அதிமுகவுக்குள் சசிகலா ரீ எண்ட்ரி கொடுக்க வசதியாக கூட அந்த ஆடியோ கசிய வாய்ப்பிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸுன் பேசியிருக்கிறார் சசிகலா என்கிறார்.

சசிகலா -ஓபிஎஸ் பேசிய ஒரு மணி நேர ஆடியோ

சசிகலா அதிமுகவில் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடகங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார். சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது. அஇஅதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை என்று முனுசாமியும், எடப்பாடியும் சொல்கின்றனர்.

சசிகலா -ஓபிஎஸ் பேசிய ஒரு மணி நேர ஆடியோ

இதுவரைக்கும் 4 ஆடியோ வெளியாகி இருக்கின்றன. அடுத்தடுத்த ஆடியோக்கள் வந்து அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்னரும் முனுசாமியும், எடப்பாடியும் அதிமுக தொண்டருடன் சசிகலா பேசவில்லை. அமமுவினரிடம்தான் பேசினார் என்று சொல்லிவந்தால், எதற்குதலையை சுற்றி மூக்கை தொட வேண்டும். நேரடியாகவே மூக்கை தொட்டுவிடலாமே என்று ஓபிஎஸுன் பேசிய ஆடியோவினை கசிய விடவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்.