மனைவி தூக்கிட்டு தற்கொலை: துக்கம் தாளாமல் கணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

 

மனைவி தூக்கிட்டு தற்கொலை: துக்கம் தாளாமல் கணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்காமல் கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பர்கூர் மற்றும் பா.முத்தம்பட்டி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மனைவி தூக்கிட்டு தற்கொலை: துக்கம் தாளாமல் கணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் பா.முத்தம்பட்டியை சேர்ந்த புருஷோத்தமன் , கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுஜாதா. இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது. இருவருமே பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

புருஷோத்தமனும், சுஜாதாவும் பர்கூரில் வசித்து வந்தனர். வயிற்று வலியால் நீண்ட நாள் அவதிப்பட்டு வந்த சுஜாதா, எந்த சிகிச்சையிலும் வயிற்று வலி குணமாகாததால் ஆறுதலுக்காக தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

மனைவி தூக்கிட்டு தற்கொலை: துக்கம் தாளாமல் கணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

தாய்வீட்டில் இருந்தவரை பர்கூர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார் புருஷோத்தமன். மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்ட வந்த பின்னர், சுஜாதாவை பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள காவலர் குடியிருப்பில் தங்க வைத்துவிட்டு, காவலநிலையம் சென்று வேலைகளை கவனித்து வந்துள்ளார் புருஷோத்தமன்.

வேலை முடிந்து மனைவியை தாய் வீட்டுக்கு அழைத்துசெல்ல, அறைக்கு சென்றபோது, அங்கே மனைவி தூக்கில் தொங்கியது கண்டுஅதிர்ந்து போயுள்ளார்.

மனைவி தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்து போயிருந்த புருஷோத்தமன், பா.முத்தம்பட்டி வீட்டின் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

புருஷோத்தமன், சுஜாதா தற்கொலைகள் பர்க்கூர் மற்றும் பா.முத்தம்பட்டியை அதிரவைத்திருக்கிறது.