நிர்வாணமாக படுத்திருக்கும் ஆண்-பெண் கொரோனா நோயாளிகள்: அதிரவைக்கும் வீடியோ

நிர்வாணமாக படுத்திருக்கும் ஆண்-பெண் கொரோனா நோயாளிகள்: அதிரவைக்கும் வீடியோ

ஆண் – பெண் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக படுத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மருத்துவமனை ஒடிசா மாநிலம் மயூர் பஞ்ச் நிர்வாகத்திலிருக்கும் கலிங்க மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை என்று தெரியவந்துள்ளது.

நிர்வாணமாக படுத்திருக்கும் ஆண்-பெண் கொரோனா நோயாளிகள்: அதிரவைக்கும் வீடியோ

கலிங்க மருத்துவ அறிவியல் கழகத்துடன் மயூர் பஞ்ச் நிர்வாகம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தினால், மூடப்பட்டிருந்த இந்த மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

நிர்வாணமாக படுத்திருக்கும் ஆண்-பெண் கொரோனா நோயாளிகள்: அதிரவைக்கும் வீடியோ

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனையில்தான் ஆண்-பெண் கொரோனா நோயாளிகள் நிர்வாணமாக கிடக்கும் வீடியோவும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

நிர்வாணமாக படுத்திருக்கும் ஆண்-பெண் கொரோனா நோயாளிகள்: அதிரவைக்கும் வீடியோ

அந்த வீடியோவினை எடுத்துள்ள நபர் அளித்திருக்கும் விளக்கத்தில், ‘’என் தந்தைக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அவரை இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாததைக் கண்டேன். நோயாளிகளுக்கு உணவு கிடைப்பதில்லை. நோயாளிகளை கவனிக்க தேவையான மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை. கழிவறைக்குள் இறந்துகிடந்த நோயாளிகளை கண்டேன். ஆண், பெண் கொரோனா நோயாளிகள் தரையில் நிர்வாணமாக படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

நிர்வாணமாக படுத்திருக்கும் ஆண்-பெண் கொரோனா நோயாளிகள்: அதிரவைக்கும் வீடியோ

வீடியோ சர்ச்சைக்கு பின்னர் இந்த மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்த மயூர் பஞ்ச் ஆட்சியர் வினீத் பரத்வாஜ், கொரோனா நோயாளிகளின் அந்த நிர்வாண வீடியோவை மறுக்கிறார். அந்த வீடியோவும் அது குறித்த தகவலும் பொய்யானவை என்று சொல்லி இருக்கிறார்.