ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வைரமுத்து

 

ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து ’நாட்படு தேறல்’ என்ற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி உள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வைரமுத்து

100 பாடல்களில் முதல் பாடல் ஏப்ரல் 18-ம் தேதி ஒளிபரப்பானது. ஒவ்வொரு வாரமும் ஒரு பாடல் வீதம், நாட்படு தேறல் என்ற தலைப்பின் கீழ் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த 23ம் தேதி அன்று 6-வது பாடல் ’என் காதலா!’ வெளியிடப்பட்டது.

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும்
சின்னக் கன்று என்று இன்று
சிந்தை மாறுமா?

வயதால் நம்
வாழ்வு முறியுமா?
வாய் முத்தம்
வயது அறியுமா?

நிலா வெண்ணிலா
வயதில் மூத்ததில்லையா
இருந்தும்
நிலவு சொல்லி இளைய அல்லி
மலர்வதில்லையா?

என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே!

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ
வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே
விதிவிலக்கும் உள்ளது

ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வைரமுத்து

ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?

காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!

அறிவழிந்து போனபின்
வயதுவந்து தோன்றுமா?
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?

அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலே
அறமிருக்கும் இல்லையா?

ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வைரமுத்து

என்ற பாடலுக்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, ஶ்ரீநிஷா பாட, ஏ.எல். விஜய் இயக்கத்தில் இதன் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கான வரவேற்பு குறித்து வைரமுத்து,
அணைகடந்த வெள்ளம்போல்
‘என் காதலா’ என்ற
என் ஆறாம் பாட்டுக்கு
நீங்கள் வழங்கிவரும் வரவேற்பால்
என் மனசுக்குள் மயிலிறகு ஊர்கிறது.

நீங்கள்
ஒருமுறை இட்ட பதிவை
இருமுறை வாசிக்கிறேன்.

மேகமில்லாமல்
ஏது மழை?
நீங்களில்லாமல்
ஏது கலை?

நன்றி.
என்று பதிவிட்டுள்ளார்.