Home அரசியல் வெறிபிடித்த நாய்... எச்.ராஜா பற்றி அமைச்சர் பிடிஆர் ஆவேசம்

வெறிபிடித்த நாய்… எச்.ராஜா பற்றி அமைச்சர் பிடிஆர் ஆவேசம்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சந்திப்பில், எச். ராஜா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, வெறிபிடித்த நாய் குறைக்கும் போதெல்லாம் அது பற்றி கருத்து கேட்டால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது. நாய் குறைப்பதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று ஆவேசமானார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

வெறிபிடித்த நாய்... எச்.ராஜா பற்றி அமைச்சர் பிடிஆர் ஆவேசம்
வெறிபிடித்த நாய்... எச்.ராஜா பற்றி அமைச்சர் பிடிஆர் ஆவேசம்

இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று ஈஷா ஜக்கி வாசுதேவ் சொல்லி வருவது குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் அண்மையில் ஒரு நிருபர் கேட்டபோது, ’’இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமானது. இதுபோன்ற கோரிக்கை விடுபவர்கள் இந்த சமூகத்தின் நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஜக்கி வாசுதேவ் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு விளம்பர பிரியர். இந்த பிரச்சினையை எழுப்பி பணம் சம்பாதிக்க அவர் மற்றொரு வழியை தேடுகிறார்.

வெறிபிடித்த நாய்... எச்.ராஜா பற்றி அமைச்சர் பிடிஆர் ஆவேசம்

ஜக்கிவாசுதேவ் ஒரு வணிக செயல்பாட்டாளர். கடவுள், மதம் ஆகியவற்றை அதற்கு உதவுவதற்காக பயன்படுத்திக் கொள்கிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஈசா யோகா மையத்தில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பது பற்றி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் சிஏஜி அறிக்கையில் சில முக்கிய குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதை நானும் கவனித்திருக்கிறேன். நானும் அதுகுறித்த விபரங்களை வெளியிடுவேன்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து ஜக்கிவாசுதேவின் ஈஷா மையம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் பிடிஆருக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திடீரென்று 19.5.2021 மாலையில், ’’ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல. அது எனது நோக்கமும் அல்ல. மேலும், ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்களோ, நிகழ்வுகளோ எழும் வகையில் இதைப் பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை. இனி எந்தவொரு நிகழ்விலும், இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை’’ என்று அந்தர் பல்டி அடித்தார்.

வெறிபிடித்த நாய்... எச்.ராஜா பற்றி அமைச்சர் பிடிஆர் ஆவேசம்

ஈஷா விவகாரத்தில் தலையிட்டதால், அமைச்சர் பிடிஆரின் குடியுரிமை குறித்து அதிர்ச்சி தகவல்களை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இதனால் ஆவேசம் அடைந்த அமைச்சர் பிடிஆர், ’’இந்த முட்டாள்களுக்கு மாட்டு மூத்திரம் குடித்து குடித்து பைத்தியம் பிடித்திருக்கு…..OCI வாக்களிக்க கூட முடியாது விஞ்ஞானி. வரம்பற்ற முட்டாள்தனம் சிரித்துக்கொண்டே தரையில் உருள வேண்டியதுதான்.’’என்று தெரிவித்திருந்தார்.

பிடிஆரின் குடியுரிமை விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லி இருந்தார் எச்.ராஜா. மேலும் ஈஷாவுக்கு எதிராக பேசியதால் அவர் கடும் கண்டனங்களை விடுத்து வந்தார்.

இந்நிலையில், எச்.ராஜா குறித்த கேள்விக்கு, ‘’ஒரு தகுதி உள்ள மனிதன் பேசுகின்ற கருத்து, விமர்சனம், கோரிக்கை பற்றின் என்னிடம் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். வெறிபிடித்த நாய் குறைகும் போதெல்லாம் அது பற்றி கருத்து கேட்டால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது. நாய் குறைப்பதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது’’ என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.,

வெறிபிடித்த நாய்... எச்.ராஜா பற்றி அமைச்சர் பிடிஆர் ஆவேசம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews