ராமதாஸ் விட்ட டோஸ்:தற்கொலை முடிவை கைவிட்ட பாமக எம்.எல்.ஏ. இரா.அருள்

 

ராமதாஸ் விட்ட டோஸ்:தற்கொலை முடிவை கைவிட்ட பாமக எம்.எல்.ஏ. இரா.அருள்

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. இரா.அருள், கடந்த 17ம் தேதி இரவு தனது முகநூலில், பாலித்தீன் பையால் தன் தலையை இறுக கட்டிய ஒரு போட்டோவை வெளியிட்டார். அத்துடன், ’’சேலத்தில் எம் மக்களுக்கு இல்லாத ஆக்சிஜன் எனக்கு தேவையா என யோசித்து வருகிறேன். காலையில் எனது தலையில் பிளாஸ்டிக் பையை கயிற்றால் கட்டிக்கொண்டு இந்த படத்தில் உள்ளது போல் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு உங்கள் எம்.எல்.ஏ. காலை 9.30 மணிக்கு தர்ணா செய்ய திட்டமிட்டுள்ளேன்.

ராமதாஸ் விட்ட டோஸ்:தற்கொலை முடிவை கைவிட்ட பாமக எம்.எல்.ஏ. இரா.அருள்

உங்களது வேலைக்காரனாக இதை செய்யவா? உங்கள் கருத்தை சொல்லவும்.. எனக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்த உங்களூக்கு கொடுக்க இந்த நேரத்தில் எனது உயிரைத்தவிர வேரெதுவும் என்னிடம் இல்லை. கண்ணீருடன் சேலம் இரா.அருள் எம்.எல்.ஏ.

திருத்தம்: நமது ஆலோசர்களது ஆலோசனையை ஏற்று அய்யா, சின்ன அய்யா அனுமதியோடு இன்னும் இரண்டு நாள் வாய்ப்பு தந்து தர்ணா’’என்று அறிவிப்பையும் பதிவிட்டிருந்தார்.

ராமதாஸ் விட்ட டோஸ்:தற்கொலை முடிவை கைவிட்ட பாமக எம்.எல்.ஏ. இரா.அருள்

இது பாமகவினர் மட்டுமல்லாது சேலம் மேற்கு தொகுதி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் மறுநாள் அதிகாலையில், இரவு முழுதும் பல தொலைபேசி அழைப்புகள், கமெண்டில் உங்களது நூற்றுக்கணக்காண ஆலோசனைகளை ஏற்று எனது முந்தைய பதிவை நீக்குகிறேன். உங்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளோடு விழிப்புணர்வு பரப்புரையை மட்டும் உங்களது ஆலோசனைப்படி முன்னெடுத்துச்செல்வோம்.நன்றி -இரா.அருள் MLA’’என்று ஒரு பதிவினை போட்டிருந்தார். அதேநேரம் அவர் தற்கொலை பதிவினை அகற்றி இருந்தார்.

ராமதாஸ் விட்ட டோஸ்:தற்கொலை முடிவை கைவிட்ட பாமக எம்.எல்.ஏ. இரா.அருள்

தர்ணாவை எல்லாம் கைவிட்டு, 19 ஆம் தேதி சேலம் இரும்பாலையில் 500 ஆக்ஸிஐன் வசதியுடன் கூடிய மருத்துவமனையின் பணியை விரைவு படுத்தும் பணி தொடர்பான ஆலோசனையில் சேலம் மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனை நடத்தியபோது, எம்.எல்.ஏ. அருள், கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினார்.

ஆனாலும், அருள் ஏன் அந்த தர்ணா முடிவை கைவிட்டார் என்ற சலசலப்பு பாமகவிலும் சேலம் மக்களிடையேயும் இருந்து வந்தது. தற்போது அந்த தர்ணா ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. திமுக ஆட்சியில் அணுசரனையோடு போய்க்கொண்டிருக்கிறது பாமக. இந்த நேரத்தில் இது மாதிரியான வேலையெல்லாம் வேண்டாம் என்று ராமதாஸ் விட்ட டோஸ் காரணமாகத்தான் அருள் அந்த தர்ணா முடிவினை கைவிட்டாராம்.