மறைந்தார் பல்லவ மன்னர் பரம்பரையில் வந்த விருத்தாசலம் முகாசாபரூர் அரசர்

 

மறைந்தார் பல்லவ மன்னர் பரம்பரையில் வந்த விருத்தாசலம் முகாசாபரூர் அரசர்

பல்லவ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த விருத்தாசலம் முகாசாபரூர் அரசர் மஹா ராஜராஜ ஸ்ரீ வீரசேகர பொன்னம்பல பாலதண்டாயுத கச்சியராயர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

மறைந்தார் பல்லவ மன்னர் பரம்பரையில் வந்த விருத்தாசலம் முகாசாபரூர் அரசர்

மேலும், வீரசேகர பொன்னம்பல பாலதண்டாயுத கச்சியராயர் அவர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு ஈடாக தமிழகத்தை ஆட்சி புரிந்தவர்கள் பல்லவர் வழியில் வந்தவர் ஆவார். காடவராயர், கச்சிராயர், சம்புவராயர் என்ற பட்டப் பெயர் கொண்ட இவரது முன்னோர்கள் கிபி 11-ஆம் நூற்றாண்டு முதலே விருத்தாசலம் அருகே உள்ள பரூர் பகுதியிலிருந்து ஆட்சி செய்து வந்தனர். வீரத்திற்காக போற்றப்பட்ட காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் இவரது முன்னோர் ஆவார். விஜயநகர ஆட்சியில் சிற்றரசர்களாகவும், ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்களாகவும் இருந்த இவர்கள் ஆன்மிகத்தில் பற்று கொண்டவர்கள்; ஆலயங்களுக்கும், மக்களுக்கும் நிலங்களை கொடையாக வழங்கிய வள்ளல் குணம் கொண்டவர்கள்’’ என்று தெரிவித்துள்ளவர்,

மறைந்தார் பல்லவ மன்னர் பரம்பரையில் வந்த விருத்தாசலம் முகாசாபரூர் அரசர்

’’மன்னர் பரம்பரையில் வந்த வீரசேகர பொன்னம்பல பால தண்டாயுத கச்சிராயர் முகாசாபரூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். அப்பகுதி மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.