ராமதாஸ் அறிவிப்பு: ஒட்டநந்தல் கிராமத்திற்கு செல்கிறது பாமக உண்மை கண்டறியும் குழு!

 

ராமதாஸ் அறிவிப்பு: ஒட்டநந்தல் கிராமத்திற்கு செல்கிறது பாமக உண்மை கண்டறியும் குழு!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டநந்தல் கிராமத்தில் அப்பாவி வன்னியர்கள் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டு, அவர்கள் செய்யாத தவறுக்காக வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு தலைமையிலான குழு செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அக்குழு அடுத்த சில நாட்களில் அதன் அறிக்கையை தாக்கல் செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அறிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராமதாஸ் அறிவிப்பு: ஒட்டநந்தல் கிராமத்திற்கு செல்கிறது பாமக உண்மை கண்டறியும் குழு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டநந்தல் கிராமத்தின் அம்மன் கோவிலில் வழக்கமாக கூழ் ஊத்தும் திருவிழா நடத்த வேண்டிய தேதி வந்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக விழா நடைபெறவில்லை. ஆனால் தலித் மக்கள் தங்கள் பகுதியில் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்த காவல்துறை உரிய நேரத்தில் தலையிட்டு விழாவை நிறுத்திவிட்டது. அவர்களும் தங்களுடைய தவறை உணர்ந்து விழாவை நடத்தவில்லை.

ராமதாஸ் அறிவிப்பு: ஒட்டநந்தல் கிராமத்திற்கு செல்கிறது பாமக உண்மை கண்டறியும் குழு!

இந்நிலையில் கடந்த 13ம் தேதியன்று ஒட்டநந்தல் கிராமத்தின் ஒரு சமூகத்தினர் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர் என்று தகவல் பரவியது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகியது. இதனால் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த சமூகத்தினர் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

காலில் விழுந்த தலித் மக்கள் மீது காலில் விழச்சொன்ன சமூகத்தினர் கொடுத்த புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஒட்டநந்தல் கிராமத்திற்கு செல்கிறது பாமக உண்மை கண்டறியும் குழு செல்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.