நடிகை சுதா சந்திரன் ரசிகர்கள் கண்ணீர்

 

நடிகை சுதா சந்திரன் ரசிகர்கள் கண்ணீர்

தமிழில் பிரபலமான நடிஅகி சுதா சந்திரன். இவரது தந்தை பழம்பெரும் பாலிவுட் நடிகர் கே.டி. சந்திரன். 86வயதாகும் சந்திரான் மாரடைப்பினால் காலமானார். சந்திரன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சுதா சந்திரன் ரசிகர்கள் கண்ணீர்

1984ல் வெளிவந்த மயூரி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுதா கே.சந்திரன். தொடர்ந்து ’சர்வம் சக்திமயம்’, ’தர்மம்’ ,’நம்பினார் கெடுவதில்லை’ , ’வசந்தராகம்’ திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்த ’சாமி 2’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தொலைக்காட்சியிலும் வந்து ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார். ஜீ தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பிறகு, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஏற்று திறம்பட நடத்தியவர் சுதா சந்திரன்.

நடிகை சுதா சந்திரன் ரசிகர்கள் கண்ணீர்

இந்த நிலையில் சுதா சந்திரனின் தந்தையும் பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 86வயதான சந்திரன், வயது மூப்பின் காரணமாக மும்பையில் வசித்து வந்தார். கடந்த 12ம் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

சந்திரன் மறைவுக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுதா சந்திரன் ரசிகர்களும் சுதாவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்ணீருடன் இரங்களும் தெரிவித்து வருகின்றனர்.