’’கண்டா வர சொல்லுங்க.. அமைச்சருக்கு சென்னைக்கு வழி சொல்லுங்க..’’

 

’’கண்டா வர சொல்லுங்க.. அமைச்சருக்கு சென்னைக்கு வழி சொல்லுங்க..’’

கொரோனா தடுப்பு பணிகளில் திமுக அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று பாஜகவினர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், தமிழக அரசை விமர்சிக்கும் பாஜகவினர் தங்கள் தலைவர்களை விமர்சித்திருந்தால் நாடு காப்பாற்றப்பட்டிருக்கும். விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல. மக்களை காப்பாற்ற வேண்டிய நேரம் இது என்று ஆவேசப்பட்டிருந்தார் கனிமொழி எம்.பி.

’’கண்டா வர சொல்லுங்க.. அமைச்சருக்கு சென்னைக்கு வழி சொல்லுங்க..’’

இதற்கு, ’’திமுக எழுப்பிய அதே கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். இது ஜனநாயக நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். விமர்சனத்தை ஏற்க கற்றுக்கொள்ளுங்கள். தொற்றுநோய் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியதில், நடவடிக்கையில் உங்கள் தலைவர் மீது முழு குறைபாடு உள்ளது.’’என்று பதிலடி கொடுத்திருந்தார் தமிழக பாஜக தலைவர் காயத்ரி ரகுராம்.

அவர் மேலும், ‘’இந்த ஆட்சியை குறை கூறாதீர்கள் என அறிவுரை கூறுகிறீர்கள். சரி, சென்னை மாநகர மக்கள், நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரியை யார் என தெரிந்து கொள்ளவும், அவரை அறிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகப்போகிறது. சென்னை பக்கமே மந்திரியை பார்க்க முடியவில்லை. அவர் திருச்சிக்கு மாத்திரம் மந்திரி இல்லையே, தலைநகருக்கும் அவர்தானே மந்திரி!? நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரியை கண்டால் வர சொல்லுங்க. சென்னைக்கு வழி சொல்லுங்க. ’’என்று கனிமொழியிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு குறித்துதான் காயத்ரி ரகுராம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.