கனிமொழியை நெகிழவைத்த சிறுமி வருண்யா தேவி

 

கனிமொழியை நெகிழவைத்த சிறுமி வருண்யா தேவி

தூத்துக்குடி சிறுமி வருண்யா தேவி தன் பிறந்த நாள் செலவீனத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ.2000ஐ என்னிடம் அளித்தது என்னை நெகிழ வைத்தது. இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம் இப்பேரிடர் காலத்தை கடந்து புதுமுனைப்போடு வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கையினை எனக்கு அளித்தது என்று தெரிவித்துள்ளார் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி.

கனிமொழியை நெகிழவைத்த சிறுமி வருண்யா தேவி

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இருந்தாலும் இரண்டாவது அலையின் தீவிரத்தால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் செலவினங்களும் அதிகரித்துக் கொண்டே வருவதால் முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு அறிவித்திருந்தார்.

கனிமொழியை நெகிழவைத்த சிறுமி வருண்யா தேவி

இதை அடுத்து தொழிலதிபர்களும் பிரபலங்களும் முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர் . இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புனித அன்னாள் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ம.வருண்யா தேவி, முதல்வருக்கு நிவாரணத்திற்காக தனது பிறந்தநாள் செலவிற்காக சேர்த்து வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை அனுப்பி இருக்கிறார்.

கனிமொழியை நெகிழவைத்த சிறுமி வருண்யா தேவி

இந்த தகவலை அறிந்ததும் தூத்துக்குடி எம்பி கனிமொழி சிறுமி வருண்யா தேவியை நேரில் அழைத்து அச்சிறுமியை வாழ்த்தி பாராட்டி உள்ளார்.

சிறுமியின் செயல் குறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்திலும் நெகிழ்ந்துள்ளார்.