“முதலமைச்சர் பெயர், போட்டோ இல்லாத தமிழக அரசின் நிவாரண பை”

 

“முதலமைச்சர் பெயர், போட்டோ இல்லாத தமிழக அரசின் நிவாரண பை”

14 மளிகை பொருட்கள் அடங்கிய பை, ரேஷனில் கொரோனா நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கோதுமை ,உப்பு ,சர்க்கரை ,ரவை ,உளுத்தம் பருப்பு, கடுகு ,மஞ்சள், மிளகாய் தூள் , குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு உள்ளிட்டவை அடங்கும். இதன் மூலம் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.அத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“முதலமைச்சர் பெயர், போட்டோ இல்லாத தமிழக அரசின் நிவாரண பை”

இந்நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு , கொரோனா சிறப்பு நிவாரண பொருட்கள் கொடுக்க உள்ள பையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் தமிழக அரசின் கோபுர சின்னமும், நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம் தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்ற வாசகம் மட்டுமே அடங்கியுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் பெயரோ , புகைப்படமோ எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இந்த புகைப்படத்தை இணையத்தில் கண்ட நெட்டிசன்கள், மக்களுக்கு சேவை செய்ய வருபவர்கள் விளம்பரங்களை தேட மாட்டார்கள் ; அவர்களுக்கு மக்களே விளம்பரமாக இருப்பார்கள் என்றும் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு தான் விளம்பரங்கள் தேவைப்படும் என்று முந்தைய அரசுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.