அகதி முகாம் விவகாரம்.. விசிக எம்.பி.க்கு ஆட்சியர் திவ்யதர்ஷினி அளித்த பதில்

 

அகதி முகாம் விவகாரம்.. விசிக எம்.பி.க்கு ஆட்சியர் திவ்யதர்ஷினி அளித்த பதில்

ஈழத் தமிழ் அகதிகள் கொரோனா விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் விசிக எம்.பி. ரவிக்குமார்.

அகதி முகாம் விவகாரம்.. விசிக எம்.பி.க்கு ஆட்சியர் திவ்யதர்ஷினி அளித்த பதில்

திருச்சியில் உள்ள சிறப்பு அகதி முகாமில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நேற்று சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். அதன் நகலை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பியிருந்தேன். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி IAS அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார். அவருக்கு நன்றி என தெரிவித்துள்ளார் விசிக எம்.பி. ரவிக்குமார்.

ஆட்சியரின் பதிலில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குணப்படுத்தப்பட்டனர். தங்களின் வேண்டுகோளின்படி நாங்கள் மருத்துவ முகாம் நடத்துகிறோம். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் 10 நாட்களுக்கு மேலாக நேர்மறைத் தன்மையைக் கடந்துவிட்டார்கள். தொடர்ந்து அவர்களூக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.