முகம் மாறிய மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கம்: முதல்வர் ஸ்டாலின் முதல் டுவிட்

 

முகம் மாறிய மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கம்: முதல்வர் ஸ்டாலின் முதல் டுவிட்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலையில் திமுக அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், ’’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..’’என்று சொல்லி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டபோது, அரங்கத்தினர் கைத்தட்டினர். ஸ்டாலின் மனைவி துர்கா தேவி உணர்ச்சிப்பெருக்கில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.

முகம் மாறிய மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கம்: முதல்வர் ஸ்டாலின் முதல் டுவிட்

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதை தொடர்ந்து அவரது டுவிட்டர் பக்கத்தின் முகமும் மாறியிருக்கிறது.

முகம் மாறிய மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கம்: முதல்வர் ஸ்டாலின் முதல் டுவிட்

’’அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்! பொருளாதாரம் – வேளாண்மை – நீர்வளம் – கல்வி-சுகாதாரம் – நகர்ப்புற வளர்ச்சி – ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும். 7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்!’’என்றும் முதல் டுவிட் செய்திருக்கிறார் ஸ்டாலின்.