’’வெட்கங்கெட்ட சங்கிகள்…’’- வெடிக்கும் அருணன்

 

’’வெட்கங்கெட்ட சங்கிகள்…’’- வெடிக்கும் அருணன்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையினை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நடந்து வந்த விலையில் எந்த மாறுதலும் செய்யப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல் டீசல் விலை 17 நாட்களுக்குப் பிறகு இன்று உயர்த்தப்பட்டிருக்கிறது.

’’வெட்கங்கெட்ட சங்கிகள்…’’- வெடிக்கும் அருணன்

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நான்கு முறை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.43 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 85.77 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைகு பெட்ரோல் விலையில் 12 காசுகள் உயர்ந்து பெட்ரோல் 92.554 ரூபாயும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து டீசல் லிட்டர் 85.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

17 நாட்கள் வரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் விலையை ஏற்றியிருப்பதால் விமர்சனம் எழுந்திருக்கிறது.

இதுகுறித்து, ‘’தேர்தல் முடிந்ததும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! இந்த கொள்ளைக்கு காரணம் மோடி அரசே என்பது தெரிந்ததா? மக்களை கொள்ளையடிக்க என்றே ஓர் ஆட்சி! வெட்கங்கெட்ட சங்கிகள்.’’என்று வெடிக்கிறார் அரசியல் விமர்சகர் அருணன்.