தேர்தல் முடிவுகள்: மனம் திறந்தார் எச்.ராஜா

 

தேர்தல் முடிவுகள்: மனம் திறந்தார் எச்.ராஜா

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாழ்த்து சொன்னவர், காரைக்குடியில் தனது தோல்வி குறித்து எதுவும் குறிப்பிடாமல் இருந்தவர் இன்று மனம் திறந்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகள்: மனம் திறந்தார் எச்.ராஜா

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1999ல் போட்டியிட்டு தோல்வியடைந்த எச். ராஜா, 2001ல் காரைக்குடி சட்டமன்ற தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது 21 தொகுதிகளில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட எச். ராஜா வெற்றி பெற்றார்.

இதன் பின்னர் 2006ல் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2014ல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2016ல் தி.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதன்பின்னர் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட எச். ராஜா தான் இந்த முறை வெற்றி பெற்று விடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி இடம் தோல்வி அடைந்தார்.

’’காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கும் எனக்காக தேர்தல் பணியாற்றிய பாஜக, அதிமுக ,கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வாக்களித்த 54000+ வாக்காள பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.’’என்று குறிப்பிட்டிருக்கிறார் தனது டுவிட்டர் பக்கத்தில்.