’’எடப்பாடியார் மனைவி இப்படி வெட்டி விளம்பரங்கள் செய்து பார்த்துள்ளோமா?’’-கே.கே.சாமி

 

’’எடப்பாடியார் மனைவி இப்படி வெட்டி விளம்பரங்கள் செய்து பார்த்துள்ளோமா?’’-கே.கே.சாமி

திமுக ஆட்சியை பிடித்து முதல்வராக வரும் 7ம் தேதி அன்று ஸ்டாலின் பொறுப்பேற்க விருக்கிறார். இந்நிலையில், வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் திமுகவினர்.

’’எடப்பாடியார் மனைவி இப்படி வெட்டி விளம்பரங்கள் செய்து பார்த்துள்ளோமா?’’-கே.கே.சாமி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி உள்ளிட்டோர் தமிழக தலைமை செயலகம் வடிவில் கேக் தயார் செய்து அதை வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.

இதுகுறித்து, ‘’எடப்பாடியார் முதல்வராக இருந்த வரை அவர் மனைவி மகன்னு யாரையாவது இப்படி வெட்டி விளம்பரங்கள் செய்து பார்த்துள்ளோமா , ஓட்டு போட்ட மக்களே சிந்தியுங்கள்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிரார் கிஷோர் கே.சாமி. அதற்கு, ’’அதாவது தமிழக ஆட்சியை இனிப்பு பண்டமாக, உணவாக கருதுகிறார்கள். அகோர பசி என்ற எடப்படியாரின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இனி என்னென்ன காட்சிகள் எல்லாம் இருக்கின்றனவோ? பங்கிட்டு உன்ன தயாராக கோட்டை கேக்..’’என்கிறார் பக்தன் என்பவர்.

’’எடப்பாடியார் மனைவி இப்படி வெட்டி விளம்பரங்கள் செய்து பார்த்துள்ளோமா?’’-கே.கே.சாமி

’’இனிமே சிந்திச்சு என்ன ஆக போது. நம் மக்கள் மீது சலிப்பும், கோபமும் தான் வருது. ஹிந்து கலாச்சாரத்தை இனி வரும் காலத்தில் வெள்ளைகாரன் தான் காப்பாத்துவான். அவனுக்கு தெரிந்தது கூட நம்ம ஆளுகளுக்கு தெரில.’’என்கிறார் ஒருவர்.

இதனால் ஆத்திரம் அடைந்த திமுக பிரமுகர் சித்தார்த்தா சங்கர், ‘’ஜெயிச்சவன் கொண்டாடத்தான் செய்வான். இது ஒரு பிரச்சனையா? சேவையா நினைக்கிற போக்குக்கும் அரசியல் தொழிலா நினைக்கிற போக்குக்கும் இதான் வித்தியாசம் போலன்னு நெனச்சிக்கிட்டு போவோம்.’’என்கிறார் எரிச்சலாக.