’’ராஜா சார்.. ப்ளீஸ்.. திமுக பதவியேத்ததும் குதிங்கோ’’

 

’’ராஜா சார்.. ப்ளீஸ்.. திமுக பதவியேத்ததும் குதிங்கோ’’

பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் எல்.முருகன், அண்ணாமலை, எச்.ராஜா மூன்று பேருமே தோல்வியை சந்தித்துள்ளதால் சமூக வலைத்தளங்களில் மூன்று பேரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

’’ராஜா சார்.. ப்ளீஸ்.. திமுக பதவியேத்ததும் குதிங்கோ’’

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு 19 ஆயிரத்து 888 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்தார் எச்.ராஜா. நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக காரைக்குடி தொகுதியில் களம் இறங்கிய எச்.ராஜா, 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தார்.

காரைக்குடி சட்டமன்ற தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்று அவர் உறுதியாக சொல்லி வந்தார். அதிமுக – பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் அழுத்தமாக சொல்லி வந்தார் எச்.ராஜா.

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக எச். ராஜா இத்தொகுதியில் களமிறங்கினார். காங்கிரஸ் சார்பில் எஸ். மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் பி. ராஜகுமார் , நாம் தமிழர் கட்சி சார்பில் என் துரைமாணிக்கம் ஆகியோர் களமிறங்கினர். இதில் எச். ராஜாவுக்கும், எஸ் மாங்குடிக்கும் போட்டி நிலவியது. நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் படி எச். ராஜா, எஸ். மாங்குடி இடம் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார்.

தோல்வியினால் எச்.ராஜா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளபோவதாக, வலைத்தளங்களில் ராஜாவின் பழைய போட்டோவை போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த போட்டோவில், ‘தற்கொலை ஒரு தீர்வு அல்ல..’என்று எழுதி இருக்கின்றனர்.

’ராஜா சார். ப்ளீஸ். கெஞ்சி கேட்டுக்கறேன். ஷேமமா போகும். திமுக பதவியேத்ததும் குதிங்கோ.’என்கிறார் சவுக்கு சங்கர் என்பவர்.