முழு ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்த முதல்வர்

 

முழு ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்த முதல்வர்

கொரோனா தாக்கம் நாளூக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால் டெல்லியில் கடந்த 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

முழு ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்த முதல்வர்

இந்தியா முழுவதுமே கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், டெல்லிக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யுமாறு அம்மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் எல்லாம் அரசு மருத்துவமனைக்கே சப்ளை செய்யப்படுவதாக தனியார் மருத்துவமனைகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதன் காரணமாக, நோயாளிகள் அனுமதிப்பதை சில தனியார் மருத்துவமனைகள் நிறுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள வேல்ர்ட் பிரைன் சென்ட்டர் மருத்துவமனை ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூடப்படுவதாக அம்மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அம்மாநில முதல்வர் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்திருக்கிறார்.