’’அதுதான் அவருக்கு கடைசி பேட்டி’’

 

’’அதுதான் அவருக்கு கடைசி பேட்டி’’

கடந்த 29ம் தேதி அன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் 160 முதல் 170 சீட்டுகள் பெற்று திமுக ஆட்சியை பிடிக்கும் சொல்லி இருந்ததற்கு, அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘’நேற்று வெளியானது கருத்து கணிப்பு அல்ல, அது கருத்து திணிப்பு தெரிவித்தார். மேலும், பல கட்டங்களில் கருத்து திணிப்பை அதிமுக தவிடுபொடியாக்கிவிட்டு இமாலய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

’’அதுதான் அவருக்கு கடைசி பேட்டி’’

இதன் பின்னர், திமுகவில் பேச்சாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், ‘’ ஜெயக்குமார் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதுதான் அவருக்கு கடைசி பேட்டியாக இருக்கும். இனி அவர் ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது வரப்போகிறது’’என்று தெரிவித்துள்ளார்.

’’அதுதான் அவருக்கு கடைசி பேட்டி’’

அவர் மேலும், ‘’அவர் மட்டுமல்ல அதிமுகவை இன்றைக்கு தனதாக்கிக்கொண்டு தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அத்துனை பேரும் மோசமாக நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அதிமுகவில் நடக்கப்போகும் ரசாயண மாற்றத்தில் முதலில் ஓரங்கட்டப்படப் போகிறவர் ஜெயக்குமாராகத்தான் இருக்கும்’’என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.