மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

பாலியல் கொலையை பற்றி ஊடகத்தில் எழுத சென்ற பத்திரிகையாளர் கட்டிலுடன் கட்டி வைக்கப்பட்டு பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலத்திற்கு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்று, ஹத்ராஸில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரித்துள்ளார். அப்போது உத்தரபிரதேச போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதியன்று சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

இதன் பின்னர் அவர் ஏப்ரல் 21ம் தேதி சிறையில் இருந்து மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சித்திக் காப்பனின் மனைவி ரைகாந்த் காப்பான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதி, சித்திக் காப்பானை சித்திரவதையில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

அந்த கடிதத்தில், தனது கணவரை மருத்துவமனை கட்டிலில் ஒரு மிருகத்தைப் போல் கட்டி வைத்திருக்கிறார்கள் என்றும், இதனால் கடந்த 4 நாட்களாக உணவு அருந்தவோ கழிப்பறைக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது என் கணவருக்கு.. என்று சொல்லி வேதனையை தெரிவித்துள்ளார்.

சித்திக் விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், சித்திக் காப்பனுக்கு நீரிழிவு நோயும் இதயக் கோளாறுகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா தொற்றுக்கும் ஆனபிறகு மதுராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நிலை மிக மோசமாக இருக்கும் நிலையிலும் கூட அவரை கட்டிலுடன் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. உயிர் காக்கும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

காங்கிரஸ் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் -பாஜக கும்பல் ஒடுக்குவதன் மூலம் தங்களின் தைரியம் இன்மையை காட்டுகின்றன. பத்திரிக்கை செய்தி சேகரிப்பு அவர்களை தடை செய்வதை விட்டுவிட்டு குற்றச் சம்பவங்களை நிறுத்துவதற்கான வழியைப் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

’’சிறையில் மயங்கி விழுந்தவரை மருத்துவமனையில் சங்கிலியால் பிணைத்து கட்டி வைத்திருக்கிறது யோகி அரசு. இந்த அநீதியை கண்டிக்க தமிழக பத்திரிக்கை நண்பர்கள் முன் வர வேண்டும். ’’மே-17 இயக்க திருமுருகன் காந்தி.

’’தமிழகத்து ஊடக நண்பர்கள் உ.பியின் சிறையில் பொய் வழக்கில் அடைபட்டு கொரொனோவால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவின் பத்திரிக்கையாளர் சித்திக் கப்பான் விடுதலைக்கு குரல் கொடுக்கவேண்டும். பாலியல் கொலையை பற்றி ஊடகத்தில் எழுதுவதற்காக சென்றவரை பொய் வழக்கில் பல மாதமாக அடைத்திருக்கிறது .

மிருகத்தைப் போல் கட்டி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்; பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அவலம்!

உ.பியில் பஞ்சாயத்து தேர்தல் பணிக்காக வந்தவர்களில் 135 பேர் கொரொனோ தொற்றினால் பலியாகியிருப்பதை அலகாபாத் நீதிமன்றம் சுட்டிக்காட்டி கண்டித்திருக்கிறது. ஒவ்வொரு பலியையும் நீதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்க உத்திரவிட்டது. நிலை இவ்வாறு மோசமாகி வரும் நிலையில் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா #SupremeCourt இன் பெஞ்ச் தலைமையில், பத்திரிகையாளர் சித்திக் கப்பனை மதுரா சிறையில் இருந்து விடுவித்து, மருத்துவ சிகிச்சைக்காக எய்ம்ஸுக்கு மாற்றக் கோரும் ஹேபியாஸ் கார்பஸ் மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும்’’ என்றும் தெரிவி்த்திருக்கிறார்.