நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

 

நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியா அதிமுகவுக்கு தீவிர பிரச்சாரம் பயணம் செய்துவிட்டு ஓய்வில் இருக்கிறார். பிரச்சாரத்தில் அவர் திமுகவை கடுமையாக விமரித்து வந்தார். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை. அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சொல்லி சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

அரசியலில் இதெல்லாம் சகஜம்தான்.

இதுகுறித்து நடிகை விந்தியா, ‘’உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.’’என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆயுளுடன் இருக்க என் ஆசிர்வாதங்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர்.

நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்