’’இவ்விரண்டில் எது வதந்தி? ’’

 

’’இவ்விரண்டில் எது வதந்தி? ’’

கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போதே தங்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களையும் சுமந்து வர வேண்டிய துர்பாக்கிய நிலைக்குக் காரணமான மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் மனசாட்சி உள்ளவராக இருந்தால் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

அந்த அளவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சனையை சந்தித்து வருவதால் மூச்சுத்திணறுகிறது இந்தியா.

’’இவ்விரண்டில் எது வதந்தி? ’’

கொரோனா சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷர்தன் தெரிவித்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்களை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருந்தார். சிங்கப்பூரில் இருந்து விமானப்படை மூலம் நான்கு ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இந்தியா வந்தடைந்தது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., ‘’20.09.2020ல் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷர்தன், மக்களவையில் நமது நாடு ஆக்ஸிஜன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாக கூறினார்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்படுவதாக தகவல் வருகிறது. வதந்தியை நம்பாதீர்கள் என்ற பிரதமர் அவர்களே! இவ்விரண்டில் எது வதந்தி? ’’என்று கேட்கிறார்.