நடிகர் விஜய்யை கொரோனா டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் நடிகை

 

நடிகர் விஜய்யை கொரோனா டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் நடிகை

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 65வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். தெலுங்கின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

நடிகர் விஜய்யை கொரோனா டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் நடிகை

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. விஜய் -பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே 10 நாட்கள் படமாக்கப்பட்டது. இதையடுத்து ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பில் சண்டைக்காட்சி, பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யை கொரோனா டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் நடிகை

ஜார்ஜியா படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு.

நடிகர் விஜய்யை கொரோனா டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் நடிகை

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் விரைந்து கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.