மழையில் சாய்ந்த 25 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள்; உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை!

 

மழையில் சாய்ந்த 25 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்கள்; உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை!

நாகையில் மழையால் நீரில் சாய்ந்த நெற்பயிர்களை, விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில், நாகை கீழ்வேளூர், கீழையூர், திருமருகல், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையில் நீரில் சாய்ந்த 25 ஆயிரம் ஏக்கர் குறுவை பயிர்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர்களுக்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்ததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து உயர்மட்ட குழு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் மழையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த அவர், பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.