தென்காசியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 25 லட்சம் நகைகள் கொள்ளை!

தென்காசியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 25 லட்சம் நகைகள் கொள்ளை!

தென்காசியில் மரஆலை அதிபர் வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு விட்டு, பட்டபகலில் 25 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

தென்காசியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 25 லட்சம் நகைகள் கொள்ளை!

தென்காசி நகரப் பகுதியின் முக்கிய பிரதான சாலை நெல்லை செல்லும் சாலை . இந்த சாலையில் உள்ள சம்பா தெருவில் குடியிருந்து வருபவர் ஜெயபால் . இவர் மரம் அறுக்கும் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இன்று இவர் வீட்டில் இவரது மனைவி விஜயலெட்சுமி மட்டும் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் இருவர் வீட்டின் வாசலில் இருந்த காலிங் பெல்லை அழுத்த, அந்த பெண் வெளியே வந்து கதவை திறந்த போது, மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து அந்தப் பெண்ணை கயிற்றால் கட்டி போட்டுவிட்டு, அவர் கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க சங்கிலி, மற்றும் வீட்டின் பீரோவில் இருந்த 50பவுன் நகை உள்ளிட்டவற்றை அந்த மர்ம நபர்கள் கொள்ளை அடித்து தப்பி ஓடிச்சென்றனர்.

தென்காசியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 25 லட்சம் நகைகள் கொள்ளை!

இச்சம்பவம் குறித்து ஜெயகுமார், தென்காசி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே, உடனடியாக தென்காசி துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொஞ்ச தூரம் ஓடி நின்றது.

பட்ட பகலில் வீடு புகுந்து, பெண்ணை கட்டிபோட்டுவிட்டு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை கொள்ளையடித்த சம்பவம் தென்காசி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.