25 கோடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள்- அடிக்கல் நாட்டிய முதல்வர்!

 

25 கோடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள்- அடிக்கல் நாட்டிய முதல்வர்!

உயர்கல்வித் துறை சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் ஆகிய புதிய துறைகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான கட்டடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், துணை வேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டடங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி.

மேலும், கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 58 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டை அறிவுசார் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், கிராமப்புற மாணவ மாணவிகள்
உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் தமிழ்நாடு அரசு, கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 66 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் / பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை துவக்கியுள்ளது. இதன்மூலம், மொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 விகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது.

25 கோடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள்- அடிக்கல் நாட்டிய முதல்வர்!

அந்த வகையில், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 25 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கணினி அறிவியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் ஆகிய புதிய துறைகளுக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகளுக்கான
கட்டடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், துணை வேந்தருக்கான குடியிருப்பு ஆகிய கட்டடங்களுக்கு
முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், கோயம்புத்தூர் – அரசு பொறியியல் கல்லூரியில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம்;
சேலம் மாவட்டம், எடப்பாடி- பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 97 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிவறைகள்;

25 கோடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள்- அடிக்கல் நாட்டிய முதல்வர்!

சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் 5 கோடியே 30 லட்சம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உலோகவியல் துறையில் முதுநிலைப் பாடப் பிரிவுக்கான வெல்டிங் தொகுதிக் கட்டடம், கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறைகள், தேர்வு அறை, கருத்தரங்கு கூடம் மற்றும் கழிவறைகள்; சேலம், அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கூடுதல்வகுப்பறைகள், 3 ஆய்வகக் கட்டடங்கள், கருத்தரங்கு கூடம் மற்றும் கழிவறைகள்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி – அரசு பலவகை தொழில்நுட்பக்கல்லூரியில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம், கூட்டரங்கம் மற்றும் கழிவறைகள்;நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை – தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல்வகுப்பறைகள்;

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில்- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
16 கூடுதல் வகுப்பறைகள், பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; திருநெல்வேலி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே
65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம்; திசையன்விளை – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில்
3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் பணியாளர் அறை, கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; பனகுடி –
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் பணியாளர் அறை,
கழிவறைகள் மற்றும் இதரக் கட்டடங்கள்;

25 கோடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள்- அடிக்கல் நாட்டிய முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு – அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 நபர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள
கலையரங்கம்;வேலூர் மாவட்டம், மாதனூர்- புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள்; குடியாத்தம் – அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள்;

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வட்டம், அக்ரஹாரம், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
நிர்வாகக் கட்டடம், மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம், சுற்றுச்சுவர் மற்றும் இதர கட்டடங்கள்; என மொத்தம் 58 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.