25 நாட்களுக்குள் ஆட்சி மாறும்: ராஜதந்திரத்தைக் கட்டவிழ்த்த துரைமுருகன்!?

 

25 நாட்களுக்குள் ஆட்சி மாறும்: ராஜதந்திரத்தைக் கட்டவிழ்த்த துரைமுருகன்!?

25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சூளுரைத்துள்ளார். 

சூலூர் : 25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சூளுரைத்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது.  அதன்படி தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.  

vote

அதே போல் மே 19ஆம் தேதி  தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ல் நடைபெறும். அரவக்குறிச்சி மற்றும் சூலூர்  தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.  

duraimurugan

இந்நிலையில் சூலூர்  திமுக வேட்பாளரான பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ’25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன். கருணாநிதியிடம் இருந்து ராஜதந்திரத்தை ஓரளவு கற்றுள்ளேன். அடுத்த 50 ஆண்டுக் காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும். அதிமுக 5 இடங்களில் கண்டிப்பாக  வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.  நீங்கள் பணத்திற்கு விலை போக மாட்டீர்கள் என்று தெரியும். சூலூர் தொகுதி மக்கள் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார்.